சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசி ஒரு மணி நேரத்தில்.. கொரோனா நோயாளிகளுக்கு ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு - சத்யபிரதா சாகு

Google Oneindia Tamil News

சென்னை: பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் தேர்தலில் வாக்களிக்கலாம் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Corona patients can vote in tn assembly elections sathya pratha sahoo

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. நாள் ஒன்றுக்கு, பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியதால், மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது. எனினும், கொரோனா கட்டுபாட்டு விதிகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டதால் நவம்பர் மாதத்துக்குப் பிறகு பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி 500க்கு கீழ் வந்தது.

'டேக் இட் ஆர் லீவ் இட்' திட்டத்தில் திமுக? - 'என்னப்பா இது' மோடில் கூட்டணி கட்சிகள்'டேக் இட் ஆர் லீவ் இட்' திட்டத்தில் திமுக? - 'என்னப்பா இது' மோடில் கூட்டணி கட்சிகள்

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்ட பின் கோயில் திருவிழாக்கள், திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்கள், சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பு காரணமாக மக்கள் ஒரே இடத்தில் கூடுவது அதிகரித்துள்ளது. மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முகக் கவசம் அணியாமல் மக்கள் கூடுவதால் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் இன்று பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சட்டசபை தேர்தலில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் மாஸ்க் அணிந்து வந்தால்தான் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.

English summary
Corona patients can vote in tn assembly elections sathya pratha sahoo
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X