சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரத்தக் கொதிப்பு ரமேஷ் குமார், சுடு தண்ணி சுப்பிரமணி, தும்மல் சேகர்.. இது வேற லெவல் வாழ்த்து!

Google Oneindia Tamil News

சென்னை: திருமணங்களுக்கு கட் அவுட் வைக்கும் கலாச்சாரம் தமிழகத்தில் அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. போஸ்டர்கள், கட்ட அவுட் மூலமாக மணமகன் மற்றும் மணமகள் தோழர், தோழிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வது வாடிக்கையாகி விட்டது.

வாழ்க்கையில் எதையாவது சாதித்து அதன் மூலமாக புகழ் வருகிறதோ, இல்லையோ , நான்கு போஸ்டர்களை அடித்து அதில் தங்கள் முகத்தை இடம்பெற வைத்து ஊரில் உள்ள நாலு பேர் பார்த்து தாங்கள் புகழ் அடைந்து விட்டதாக தங்களுக்குத் தாங்களே திருப்திப் பட்டுக் கொள்ளும் மனப்பான்மை தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் அதிகரித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை

சீசனுக்கு சீசன் இதுபோல திருமண பேனர் மற்றும் கட் அவுட்டுகள் வைப்பதில் புதுமை புகுத்தப்படுகிறது .

கொரோனா கால கட்அவுட்

கொரோனா கால கட்அவுட்

இப்போது கொரோனா நோய் பரவல் காலம் அல்லவா. அதற்கு ஏற்ற ஒரு கட்டவுட் தற்போது வைரலாக சுற்றி வருகிறது. அதன் தலைப்பு.. இன்ஜினியருக்கு தொற்று உறுதி, covid-19 என்று போடப்பட்டுள்ளது. அதாவது மணமகன் இன்ஜினியரிங் படித்து உள்ளார் . அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்பதைத்தான் இப்படி எழுதி தங்களது கிரியேட்டிவிட்டியை காண்பித்துள்ளனர் அந்த இளைஞர்கள்.

தொற்று உறுதியான நாள்

தொற்று உறுதியான நாள்

தொற்று உறுதி செய்த நாள் ஜூன் மாதம் 14ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருமண நாளை தான் இப்படி அவர்கள் போட்டுள்ளார்கள் தொற்று பரவிய இடம் என்று கனியாமூர் என திருமணம் நடைபெற்ற ஊர் பெயர் இடம் பெற்றுள்ளது. தொற்றிக் கொண்டவர்.. என்று மணமகள் பெயர் பொன்னரசி குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட வேண்டியது மனைவியோடு

போராட வேண்டியது மனைவியோடு

சிகிச்சை என்று ஒரு ஐடியா கொடுத்துள்ளார்கள். அது தான் இதில் ஹைலைட். நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவோடு அல்ல, உன் மனைவி பொன்னரசி உடன்.. என்று போட்டு குபீர் சிரிப்பு மூட்டி உள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் போஸ்டரில் சிரித்தபடி இருக்கும் காட்சி இந்த பஞ்ச் லைனை பார்த்த பிறகுதான் போல.

வைரஸ் வசந்த், சுடுதண்ணீர் சுப்பிரமணி

வைரஸ் வசந்த், சுடுதண்ணீர் சுப்பிரமணி

இதில் அடுத்த ஹைலைட், வாழ்த்தும் நண்பர்கள் பெயர்தான் . ஓட்டேரி நரி என்று பெயர் வைத்துக் கொண்டது போல, இங்கும் வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்கள் மணமகன் நண்பர்கள். நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ் குமார், பாசிட்டிவ் பிரகாஷ், வைரஸ் வசந்த், சுடுதண்ணி சுப்பிரமணி, காய்ச்சல் கருப்பன், தும்மல் சேகர், ஆம்புலன்ஸ் ஆதி, கோவாக்சின் சூர்யா, சானிடைசர் ஸ்ரீராம்.. இப்படி போகிறது லிஸ்ட்.

என்ன ஒரு யோசனை

என்ன ஒரு யோசனை

நாட்டில் நம்ம மக்களுக்கு கிரியேட்டிவ் எண்ணங்கள் எப்படி எல்லாம் போகிறது பாருங்கள். கொரோனா ஊரடங்கில் விட்டத்தை பார்த்து மல்லாக்க யோசித்ததில்தான் இந்த லட்டு மாதிரி யோசனை வந்ததோ என்னமோ தெரியவில்லை.

English summary
A wedding cut out is going viral in social media in Tamil nadu where friends of the bride and bridegroom greets with covid related words.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X