சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா சேலை,ஜிமிக்கி கம்மல், தோசை கூடவே மாஸ்க் பரோட்டா - இதைப்பார்த்தா ஓடிப்போயிராது

கொரோனா வந்தா ஆளை கொன்னுபுடும்னு உலகமே பயந்துட்டு இருக்கும் போது நம்ம ஊர்லதான் கொரோனாவுக்கே டஃப் கொடுக்கிற மாதிரி பல விசயங்களை பண்றாங்க. கொரோனா டிசைன்ல சேலை கட்டுறதுல ஆரம்பிச்சி, கொரோனா ஜிமிக்கி கம்மல்

Google Oneindia Tamil News

சென்னை: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பல லட்சம் பேரை காவு வாங்கிக்கொண்டிருக்கும் போது நம்ம ஊரில்தான் மீம்ஸ் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமா சேலையில் கொரோனாவை டிசைன் செய்வது தொடங்கி ஜிமிக்கி கம்மல், வீடுகளில் கொரோனா தோசை, கடைகளில் மாஸ்க் பரோட்டா என ட்ரெண்டுக்கு தகுந்தார் போல செய்து வியாபாரத்தில் லாபத்தை அள்ளுகிறார்கள்.

கோ கோ கொரோனா என்று பலரும் அலறிக்கொண்டிருக்கிறார்கள். முக கவசம் இல்லாமல் இப்போது யாரும் வெளியே வருவதேயில்லை. மூச்சுத்திணறல் வந்தாலும் பரவாயில்லை முக கவசம் அவசியம் என்று பலரும் இப்போது நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் பல கடைகளில் வியாபாரம் டல்லடிக்கிறது. காய்கறி கடைகள், உணவு கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகிய அத்தியாவசிய கடைகள் தவிர பல கடைகள் பூட்டடப்பட்டுள்ளன. கடைக்கு வாடிக்கையாளர்களை வரவழைக்கத்தான் பலரும் மெனக்கெடுகிறார்கள். நடிகைகள் பெயரில், சினிமா படங்கள் பெயரை ஃபேஷனை அறிமுகப்படுத்திய நம்ம ஊர் மக்கள் இப்போது கொரோனா வைரசை ஃபேஷன் டிரெண்ட் ஆக்கியுள்ளார்கள்.

அய்யன் கண்ணதாசருக்கு என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி - பிறந்த நாளுக்கு கமல்ஹாசனின் கவிதைஅய்யன் கண்ணதாசருக்கு என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி - பிறந்த நாளுக்கு கமல்ஹாசனின் கவிதை

சேலையில் கொரோனா

சேலையில் கொரோனா

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் போல டிசைன்கள் போடப்பட்ட புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பல வண்ணங்களில் கொரானா வைரஸ் டிசைன் புடவை பலரையும் கவர்ந்திருக்கிறது. மற்ற புடவைகளை விட கொரோனா புடவைகளை பெண்கள் விரும்பி வாங்கி செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

கொரோனா உருவம்

கொரோனா உருவம்

இதே போல கொரோனா உருவத்தையே புடவையில் எம்ராய்டரி செய்து அதை பேஷனாக அறிமுகம் செய்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த பேஷன் டிசைன் கல்லூரி மாணவி. கறுப்பும் வெள்ளையுமாக கலந்து கட்டி டிசைன் செய்து கொரோனாவையே வெட்கப்பட வைத்திருக்கிறார்.

ஜிமிக்க கம்மல் கொரோனா

புடவை மட்டும்தான் டிசைன் செய்வீங்களா? நாங்களும் வருவோம்ல என்று தங்க நகை வடிவமைப்பாளர்களும் தங்கள் பங்குக்கு கிளம்பி விட்டார்கள். கொரோனா வைரஸ் வடிவ ஜிமிக்கி கம்மலை டிசைன் செய்திருக்கிறார் ஒரு நகைக்கடைக்காரர். புதுக்கோட்டையில் நகைப் பட்டறை வைத்திருக்கும் வீரமணிதான் கொரோனா டிசைன் ஜிமிக்கி கம்மலுக்கு சொந்தக்காரர்.

ட்ரெண்ட் வியாபாரம்

ட்ரெண்ட் வியாபாரம்

இதே போல தோடு எங்களுக்கும் வேண்டும் என்று கேட்டு நிறைய ஆர்டர்கள் வருகின்றனவாம். தங்க நகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் பெண்களிடம் தங்கத்திற்கான மவுசு இன்னும் குறையவில்லை அதனால்தான் கொரேனா ஜிமிக்கி செய்ய ஆர்டர் குவிந்து வருகிறதாம் அதனால் ட்ரெண்டுக்கு தகுந்தார் போல கொரோனா ஜிமிக்கி செய்ய ஆரம்பித்து விட்டார்.

இந்த தோசை சாப்பிட ருசிக்குமா

இந்த தோசை சாப்பிட ருசிக்குமா

கொரோனா வைரஸ் எல்லோரையும் சாப்பிட்டுக்கொண்டிருக்க நம்ம ஊர்க்காரர்கள்தான் கொரோனா வடிவத்தில் தோசையும், போண்டா, பக்கோடா செய்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். உணவுப்பண்டங்களின் ருசிதான் எப்படி இருக்குமோ.

பரோட்டா மாஸ்க்

பரோட்டா மாஸ்க்

அது மட்டுமா, இப்போது மாஸ்க் போட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பரோட்டாவையே மாஸ்க் போல டிசைன் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர். இதெல்லாம் பார்த்துமா கொரோனா இன்னும் தமிழ்நாட்டுல இருக்கு? இந்நேரம் ஓடியிருக்க வேணாமா.

Recommended Video

    மதுரையில் அசத்தும் மாஸ்க் புரோட்டா.. நாடு முழுவதும் வைரல்
    கொரோனா கட்டில்

    கொரோனா கட்டில்

    கொரோனா சேலை, கொரோனா தோடு மட்டும்தானான்னு கேட்கிறவங்களுக்கு இதே இருக்கே சமூக இடைவெளி கட்டில் என்று ஒருவர் உருவாக்கியுள்ளார். ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளி விட்டு பழக வேண்டும் என்று சொல்வதால் படுக்கை அறையிலேயே சமூக இடைவெளியை உருவாக்கி விட்டனர். இனி கட்டிலில் இப்படித்தான் ஒருவருக்கொருவர் பட்டுக்காம படுங்க என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றனர். இந்த கொரோனா காலம் முடியும் வரை இன்னும் என்னென்ன பார்க்கப் போகிறோமோ தெரியலையே.

    English summary
    Fashion Design student make a coronavirus saree and gold smith design corona jimmi kammal in TamilNadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X