சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா..1,827 பேருக்கு புதிய தொற்று - 10,033 பேருக்கு சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,827 ஆகவும், இன்று மட்டும் பாதிப்புக்குள்ளானோர் 10,033 ஆகவும் உள்ளது. தமிழகம் முழுவதும் 10,033 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 764 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Recommended Video

    COVID-19 பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா? மா சுப்பிரமணியன் பதில் *Health

    தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் புதிய வகை கோவிட் 19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கல்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் ஜூன் 24 முதல் கட்டாயமாக முக கவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆட்டம் காட்டும் கொரோனா! குறுக்கே வந்த குரங்கு அம்மை! இத்தனை பேருக்கு பாதிப்பா? அச்சத்தில் மக்கள்! ஆட்டம் காட்டும் கொரோனா! குறுக்கே வந்த குரங்கு அம்மை! இத்தனை பேருக்கு பாதிப்பா? அச்சத்தில் மக்கள்!

    1827 பேர் பாதிப்பு

    1827 பேர் பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,73,116 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் 771 பேர் பாதிப்பு

    சென்னையில் 771 பேர் பாதிப்பு

    அதிகபட்சமாக சென்னையில் 771 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 316 பேருக்கும், கோவையில் 85 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 764 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,25,057 ஆக உயர்ந்துள்ளது.

    10,033 பேர் சிகிச்சை

    10,033 பேர் சிகிச்சை

    கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 10,033 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு

    வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு

    இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவிகிதம் பேரை தேர்வு செய்து ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    In Tamil Nadu 1,827 new cases have been confirmed in the last 24 hours. Today, 764 people have recovered and returned home in a single day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X