சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்டாவை "ஓவர் டேக்" செய்த ஓமிக்ரான்.. வல்லுனர்கள் வார்னிங்.. தெரிந்து கொள்ள வேண்டிய 11 விஷயங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: ஓமிக்ரான் கொரோனா மீதான அச்சம் உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

    US Economyஐ பாதிக்கும் Omicron! அப்போ India? | OneIndia Tamil

    அதிகாரபூர்வ தகவல்களின்படி உலகம் முழுக்க தற்போது 110க்கும் அதிகமான நபர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இது மொத்தம் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. டெல்டாவை விட இது அதிக முறை உருமாற்றம் அடைந்துள்ளது. அதிக ஆபத்து கொண்டதாக உள்ளது.

    இதனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸை கவலை அளிக்க கூடிய வைரஸ் வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உருமாற்றம் அடைந்த B.1.1.529 ஓமிக்ரான் கொரோனா ஏன் ஆபத்தானது, அதை பற்றி நமக்கு என்னென்ன விவரங்கள் தெரியும் என்று தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவர் பிரியா சம்பத்குமார் விளக்கி உள்ளார்.

    ஓமிக்ரான் பரபரப்பு.. தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு? கலெக்டர்களுடன், இறையன்பு ஆலோசனை ஓமிக்ரான் பரபரப்பு.. தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு? கலெக்டர்களுடன், இறையன்பு ஆலோசனை

    ஓமிக்ரான் கொரோனா

    அவர் செய்துள்ள போஸ்டில், 1. இந்த ஓமிக்ரான் கொரோனா முதலில் கண்டறியப்பட்டது தென்னாப்பிரிக்காவில். போட்ஸ்வானாவில் முதலில் கண்டறியப்பட்டது. நவம்பர் 9ம் தேதி கண்டறியப்பட்டது. சரியாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டு 3 வாரங்கள் ஆகிவிட்டன. இது நீண்ட காலம்.

    கவலை அளிக்க கூடிய கொரோனா

    கவலை அளிக்க கூடிய கொரோனா

    2. இதை உலக சுகாதார மையம் கடந்த 26ம் தேதி கவலை அளிக்க கூடிய கொரோனா வகை என்று அறிவித்தது. 3. ஏகப்பட்ட உருமாற்றங்கள் இருப்பது ஓமிக்ரான் கொரோனா வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. 4. நவம்பர் 27ம் தேதி கணக்குப்படி பெல்ஜியம், போஸ்ட்வானா, ஜெர்மனி, ஹாங்காங், இஸ்ரேல், இத்தாலி, யுகேவில் இந்த ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் இது வேகமாக பரவுகிறது என்பது.

    டெல்டா

    டெல்டா

    5. ஓமிக்ரான் கொரோனா ஏன் கவலை அளிக்க கூடியது என்றால் இது தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவுகிறது. சில இடங்களில் டெல்டா வகையை விட வேகமாக பரவுகிறது. இதற்கு முன் எந்த வகையான கொரோனாவிற்கும் டெல்டா வகையை விஞ்சும் ஆற்றல் இல்லை. இது மட்டுமே டெல்டாவை விஞ்சி உள்ளது. எனவே இது ஆபத்தானது.

    நிறைய உருமாற்றம்

    அதேபோல் இதில் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஸ்பைக் புரோட்டின்களில் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடலில் உள்ள கொரோனா எதிர்ப்பு சக்தி, வேக்சின் ஆற்றல், இப்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக வேலை செய்யாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

    வேக்சின்

    6. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா பரவிய பலருக்கு வேக்சின் போடப்படவில்லை. பலருக்கு குறைவாக வேக்சின் போடப்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனா பாதித்த பலர் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இதுவரை ஓமிக்ரான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை.

    பயண கட்டுப்பாடுகள்

    7. இதனால் பயண கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்கா. ஐரோப்பா, யு. கேவில் பல நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெளிநாட்டு பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் சோதனைகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் திடீரென செய்யப்படும் பயண விதி மாற்றங்களுக்கு தயாராக இருங்கள்.

    டெஸ்டிங்கை உயர்த்த வேண்டும்

    8. ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவக்கூடியதா அல்லது அதிக ஆபத்தானதா என்று இன்னும் முழுமையாக நமக்கு தெரியாது. 9. ஓமிக்ரான் கொரோனா பரவலை குறைக்க வேண்டும் என்றால் அதிக அளவில் வேக்சினேஷனை அதிகரிக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். டெஸ்டிங்கை உயர்த்த வேண்டும்.

    10. சர்வதேச அளவில் வேக்சின் போடும் அளவை அதிகரிக்க வேண்டும். ஜீன் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். எம்ஆர்என்ஏ வேக்சினில் ஓமிக்ரான் கொரோனா ஏற்றபடி வேகமாக மாற்றத்தை செய்ய முடியும் என்றாலும் பாதி உலக மக்களுக்கு இப்போது இருக்கும் வேக்சினே சென்று சேரவில்லை. எல்லோருக்கும் வேக்சின் சேரும் வரை யாருமே பாதுகாப்பானவர்கள் இல்லை.

    பிசிஆர் டெஸ்ட்

    11. இப்போது இருக்கும் பிசிஆர் டெஸ்ட் மூலமே ஓமிக்ரான் கொரோனாவை கண்டறிய முடியும். 3 டார்க்கெட் ஜீன்கள் இதில் காணப்படவில்லை. இதை பிசிஆர் சோதனையில் கண்டறிய முடியும். இதன் மூலம் ஜீன் சோதனை செய்யாமலே ஓமிக்ரான் கொரோனாவை ஓரளவிற்கு கண்டறிய முடியும். ஜீன் சோதனை மூலம் இதை உறுதி செய்யவும் முடியும். ராபிட் ஆண்டிஜன் சோதனை மூலம் ஓமிக்ரான் கொரோனாவை கண்டறிய முடியுமா என்று தெரியவில்லை, என்று பிரபல மருத்துவர் பிரியா சம்பத்குமார் விளக்கி உள்ளார்.

    English summary
    Coronavirus: 11 Important things you should know about B.1.1529 Omicron mutant that spreads in South Afirca and many other nations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X