சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1103 பேர்.. 8 கிமீக்கு கொரோனா கன்டெய்ன்மெண்ட் பிளான்.. இனி இதுதான் வேலை.. பீலா ராஜேஷ் செம திட்டம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, முக்கியமாக டெல்லி மாநாடு காரணமாக தமிழகத்தில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, முக்கியமாக டெல்லி மாநாடு காரணமாக தமிழகத்தில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

Recommended Video

    நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ்... யார் இந்த பீலா ராஜேஷ்?

    கொரோனா பாதிப்பு இந்தியாவில் வேகம் அடைந்து வருகிறது. இந்தியாவில் மொத்தமாக 1906 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 53 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. மொத்தம் 110 பேருக்கு நேற்று மட்டும் கொரோனா பாதித்துள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 234 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பு 2,014; உயிரிழப்பு 56 ஆக உயர்வு- அதிக பாதிப்பில் தமிழகம் 3-வது இடம் கொரோனா பாதிப்பு 2,014; உயிரிழப்பு 56 ஆக உயர்வு- அதிக பாதிப்பில் தமிழகம் 3-வது இடம்

    டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

    டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

    இந்தநிலையில் நேற்று பாசிட்டிவ் வந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மொத்தமாக டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் நாள் 50 பேருக்கும், அதற்கு முன் 30 பேருக்கும் கொரோனா வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லோரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ளாத 44 பேருக்கு வேறு வழிகளில் கொரோனா வந்துள்ளது.

    அரசு திட்டம்

    அரசு திட்டம்

    இந்த நிலையில்தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, முக்கியமாக டெல்லி மாநாடு காரணமாக தமிழகத்தில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதற்காக கன்டெய்ன்மெண்ட் பிளான் எனப்படும் பிளான் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதான் தமிழகத்தில் கூடுதலாக கொரோனா பரவுவதை தடுக்கும். அதன்படி டெல்லி மாநாடு சென்ற இந்த 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்துள்ளனர்.

    எல்லா வீடுகளுக்கும் செல்வார்கள்

    எல்லா வீடுகளுக்கும் செல்வார்கள்

    இந்த 1103 பேரின் வீட்டிற்கும் இன்று அதிகாரிகள் செல்வார்கள். அவர்களின் வீட்டை சுற்றி இருக்கும் 5 கிமீ பகுதிக்கு கன்டெய்ன்மெண்ட் சோன் அமைப்பார்கள். இதை தமிழில் கட்டுப்பாட்டு பகுதி என்று அழைக்கலாம். இந்த 5 கிமீ பகுதிக்குள் அதிகாரிகள் மொத்தமாக களமிறக்கப்பட்டு வீடு வீடாக செல்வார்கள். எல்லா வீட்டிலும் யாருக்கு எல்லாம் காய்ச்சல் உள்ளது, யாருக்கு எல்லாம் கொரோனா அறிகுறி உள்ளது என்று பார்ப்பார்கள்.

    பஃபர் சோன் அமைப்பார்கள்

    பஃபர் சோன் அமைப்பார்கள்

    அதோடு அவர்கள் இருக்கும் பகுதியை சுற்றி 8 கிமீ பகுதிக்கு பஃபர் சோன் அமைப்பார்கள். இப்படி பஃபர் அமைக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. அங்கு சாலைகள், அத்தியாவசிய கடைகள் எல்லாம் அடைக்கப்படும். அங்கு அத்தியாவசிய பொருட்களை அரசே வாங்கி மக்களுக்கு கொடுக்கும். தெரு முழுக்க போலீஸ் களமிறக்கப்படும்.

    கேரளா இப்படித்தான்

    கேரளா இப்படித்தான்

    இது போன்ற பணிகள் பெரிய அளவில் கலவரங்கள் நடக்கும் சமயத்தில் மட்டுமே செய்யப்படும். தற்போது தமிழகத்தில் இந்த 1103 பேர் இருக்கும் கிராமங்களும் இப்படி பஃபர் சோன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு இன்றில் இருந்து கடுமையான சோதனைகள் நடக்கும். பொதுவாக ஒரு இடம் கன்டெய்ன்மெண்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டால் அங்கு விரைவில் கொரோனா பாதிப்பு வேகமாக குறையும். சீனாவில் மொத்தமாக வுஹன் நகரமே கன்டெய்ன்மெண்ட் செய்யப்பட்டது.

    தனியார் உதவி

    தனியார் உதவி

    கேரளாவில் தற்போது மொத்தமாக காசர்கோடு மாவட்டம் கன்டெய்ன்மெண்ட் செய்யப்பட்டுள்ளது. அங்கு மிக கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுப்பாடு தற்போது தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் எல்லாம் தனியார் மருத்துவமனை அதிகாரிகளையும் களமிறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நேற்று சுகாதாரதத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தனியார் மருத்துவமனைகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    English summary
    Coronavirus: 1103 people came forward in Tamilnadu, Govt plans for containment operation from today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X