சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளாஸ்மா சிகிச்சை சக்சஸ்.. தமிழகத்தில் அடுத்தடுத்து குணமான 7 பேர்.. விஜயபாஸ்கர் சொன்ன மாஸ் செய்தி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

Recommended Video

    Flight Service To Chennai | சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா?.. நீடிக்கும் குழப்பம்..

    தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19372 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12757 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 12 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

    தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் விமானங்கள், ரயில்கள், வாகனங்கள் நுழைய கர்நாடகா அதிரடி தடைதமிழகம் உட்பட 5 மாநிலங்களின் விமானங்கள், ரயில்கள், வாகனங்கள் நுழைய கர்நாடகா அதிரடி தடை

    பிளாஸ்மா

    பிளாஸ்மா

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக சென்னையில் இருக்கும் சில நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10க்கும் அதிகமான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிலருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    உடலில் முன்னேற்றம்

    உடலில் முன்னேற்றம்

    இப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 10 பேருக்கும் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த 10 பேருக்கும் உடல் நிலை மற்றும் நோய் எதிர்ப்பு திறன் இரண்டையும் கருத்தில் கொண்டு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    எல்லோரும் குணமடைந்தனர்

    எல்லோரும் குணமடைந்தனர்

    இவர்கள் எல்லோரும் ஒரே வாரத்தில் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தற்போது மீதம் இருக்கும் சிலருக்கு இதேபோல் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தலாமா என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அதில் இருந்து முழுமையாக குணமடைந்த பின் அவர்களின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து அதை வைத்து பிளாஸ்மா சிகிச்சை அளிப்பார்கள்.

    பிளாஸ்மா சிகிச்சை

    பிளாஸ்மா சிகிச்சை

    அவர்களின் உடலில் இருக்கும் ரத்தத்தை எடுத்து அதை வேறு கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்துவார்கள். ஏற்கனவே கொரோனா வந்து குணமடைந்த நபரின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை மட்டும் வெளியே எடுத்து அடுத்த கொரோனா நோயாளிக்கு செலுத்துவார்கள். இதுதான் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை ஆகும். தமிழகத்தில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை கொஞ்சம் கொஞ்சமாக பலன் அளிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus: 7 people recovered in Tamilnadu after getting plasma treatment so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X