சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்ப பாரு என்ன முஸ்லீம்.. வெள்ளம் வந்தப்போ மசூதியில சோறு போட்டாங்களே.. மறந்துட்டீங்களா.. சிம்பு நச்!

முஸ்லீம்கள் என்ற பிரிவினை வேண்டாம் என்று சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "முஸ்லிம்களுக்கு உணர்வு கிடையாதா.. அன்னைக்கு வெள்ளம் வந்தப்போ மசூதியில இடம் தந்து அத்தனை பேருக்கும் சோறு போட்டாங்களே, அப்போ அது தேச விரோதமான ஒரு குற்றமா தெரியலையா? இப்போ மட்டும் தெரியுதா? எப்ப பாரு முஸ்லிம்களை தீவிரவாதம், தீவிரவாதின்னு சொல்லிட்டு?, எல்லாம் தமிழர்கள் அப்படிங்கிற உணர்வு நமக்கு வேணும்" என்று நடிகர் சிம்பு பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

சிம்பு - தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள், தனிக்கென தனி வழி என்று சென்று கொண்டிருப்பவர்.. அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்து வருகிறார்.. சமீப காலமாக அரசியல், சினிமா, போராட்டம் குறித்த கருத்துக்களையும் இவர் தெரிவித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி காவிரி விவகாரம் வரை தமிழக பிரச்சனைகளில் சிம்புவின் கருத்துக்கள் கவனிக்கப்பட்டவையாகவே அமைந்தன.. குறிப்பாக கர்நாடகாவில் இருந்து காவிரி பெறுவதற்கு புதுவிதமான ஐடியாவை சொல்லி, அனைத்து தரப்பு மக்களையும் சிலிர்க்க வைத்தார்.

வீடியோ

வீடியோ

சுருக்கமாக சொன்னால் காவிரி விவகாரம் வெறிபிடித்து உச்ச நிலையில் இருந்தபோது, கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு தண்ணீரை வழங்கி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.. இதற்கு பிறகுதான் இரு மாநில மக்களின் விரோதமும் குறைந்து இணக்கமானார்கள்.. இதற்காக சிம்பு எடுத்த புது முயற்சி பெருமளவு உதவியது என்பதை மறுக்க முடியாது!

டெல்லி மாநாடு

டெல்லி மாநாடு

இந்நிலையில், கொரோனா பிரச்சனை இந்தியாவில் தலை தூக்கி உள்ளது.. மாநிலங்களில் தமிழகம் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.. இதற்கு காரணம் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த இஸ்லாமியர்கள்தான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.. சோஷியல் மீடியாவிலும் இது பூதாகரமாக சொல்லப்படுகிறது.

சிம்பு

சிம்பு

கொரோனா விவகாரத்தில் சாதி, மதம், பிரிவினை பார்க்கக்கூடாது என்று நம் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் அடிக்கடி வலியுறுத்தியபடியே உள்ளனர்.. ஆனாலும் இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.. நொந்து போயுள்ளனர்.. இந்த நேரத்தில் சிம்பு முன்பு ஜல்லிக்கட்டு விவகாரத்தின்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதை தற்போது சோஷியல் மீடியாவில் பல இஸ்லாமிய சகோதரர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.. அந்தப் பேட்டியில் சிம்பு கூறியிருந்ததாவது:

முஸ்லீம்கள்

முஸ்லீம்கள்

"முஸ்லிம்கள் என்ன தமிழர்கள் கிடையாதா... முஸ்லிம்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லையா? அவங்களுக்கு உணர்வு கிடையாதா? இது தேச விரோதம் என்கிற மாதிரி இந்த விஷயத்தை திசை திருப்புவது சரியா? அப்படின்னா வெள்ளம் வந்துச்சே அப்போ அத்தனை மசூதியிலும் முஸ்லிம்கள் இடம் கொடுத்து சோறு போட்டாங்களே.. அப்போ அன்னைக்கு அது தேச விரோதமான ஒரு குற்றமா?

தமிழர்கள்

எப்ப பாரு முஸ்லிம்களை தீவிரவாதம், தீவிரவாதின்னு சொல்லிட்டு? யாரையாவது கார்னர் பண்றதுக்கு ஒரு பேர் வேணும்.. அதுக்காக முஸ்லிம்களை பயன்படுத்திக்கிறதா? ஒரு இந்துவா இருந்தாலும், கிறிஸ்துவனா இருந்தாலும், முஸ்லீமா இருந்தாலும், எந்த சாதி, மதமா இருந்தாலும் அத்தனையும் விட்டுவிட்டு எல்லாரும் தமிழர்கள் அப்படிங்கிற உணர்வுக்காகத்தான் போராடணும்" என்கிறார். சிம்பு பேசிய இந்த பேச்சிற்கு ஏராளமான வரவேற்புகள் குவிந்து வருகின்றன!

English summary
coronavirus: actor simbu supports islamic people, and says In Tamil Nadu, everyone is equal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X