சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொஞ்சம் அரசியல்.. நிறைய உதவி.. "தென்னிந்தியா" முழுக்க வரவேற்பை பெற்ற விஜயின் மூவ்.. செம பின்னணி!

நடிகர் விஜய் கொரோனா நிவாரண நிதியாக தென்னிந்திய மாநிலங்களுக்கு உதவி செய்தது மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய் கொரோனா நிவாரண நிதியாக தென்னிந்திய மாநிலங்களுக்கு உதவி செய்தது மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    'தென்னிந்தியா' முழுக்க வரவேற்பை பெற்ற விஜயின் மூவ்.. செம பின்னணி!

    கொரோனா இந்தியா முழுக்க வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கொரோனாவால் தென்னிந்திய மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் தென்னிந்திய மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார்.

    தமிழகத்திற்கு மொத்தம் ரூபாய் 50 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். பிரதமரின் சிறப்பு கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

    வேறு மாநிலங்கள்

    வேறு மாநிலங்கள்

    இதுபோக கேரளாவிற்கு 10 லட்சம் நிதி வழங்கி உள்ளார். அதேபோல் சினிமா சங்கமான பெப்சி சங்கத்திற்கு 25 லட்சம் வழங்கி உள்ளார். புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். மொத்தம் 1.30 கோடி ரூபாய் நிவாரண நிதியை விஜய் வழங்கி உள்ளார். விஜயின் இந்த உதவி நாடு முழுக்க பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    வருமான வரியை சோதனை

    வருமான வரியை சோதனை

    சில வாரங்களுக்கு முன் நடிகர் விஜயின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஆனால் இந்த சோதனையில் அவரின் வீட்டில் இருந்து எந்த விதமான பொருளோ, பணமோ பறிமுதல் செய்யப்படவில்லை. ஒரு ரூபாய் கூட விஜயின் வீட்டில் பறிமுதல் செய்யப்படவில்லை. விஜய் தான் நடித்த படத்திற்கு எல்லாம் சரியாக வரி கட்டி இருக்கிறார் என்று வருமான வரித்துறை அவருக்கு சர்டிபிகேட் கொடுத்தது. இதனால் அந்த சிக்கலில் இருந்து அவர் வெளியே வந்தார்.

    அரசியல் அழுத்தம்

    அரசியல் அழுத்தம்

    ஆனால் இப்படி வருமான வரித்துறைக்கு பின்பும் கூட பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் நிதி அளித்துள்ளார். விஜயின் இந்த செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் இப்படி உதவி செய்தது, அவர் அரசியல் எதையும் பார்க்காமல் உதவி செய்துள்ளார். தன் மீது வைக்கப்பட்ட அரசியல் அழுத்தங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

    மக்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம்

    மக்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம்

    மக்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம் என்று அவர் செயல்பட்டுள்ளார் என்று அவரின் ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதேபோல் நடிகர் விஜய் தனது உதவி தொகையை தென்னிந்தியா மாநிலங்கள் மீது கவனம் செலுத்தி கொடுத்து இருக்கிறார். முக்கியமாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 10 லட்சம் கொடுத்துள்ளார்.

    கர்நாடகா நிலை

    கர்நாடகா நிலை

    அது போக கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரிக்கு தலா 5 லட்சம் கொடுத்துள்ளார். இதன் மூலம் விஜய்க்கு இருக்கும் தென்னிந்திய பாசம் வெளியே வந்துள்ளதாக அவரின் ரசிகர்கள் கூறுகிறார்கள். தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் எந்த நடிகரும் இப்படி செய்யவில்லை. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் யாரும் 6 மாநிலத்திற்கும் சேர்த்து உதவி செய்யவில்லை.

    அரசியல் ஸ்டேட்மென்ட்

    அரசியல் ஸ்டேட்மென்ட்

    விஜய் மட்டுமே இப்படி தென்னிந்தியா முழுமைக்கும் உதவி செய்துள்ளார். இது ஒரு வித 'அரசியல் ஸ்டேட்மென்ட்' என்று கூறுகிறார்கள்.இவரின் இந்த செயலை கர்நாடக பத்திரிகைகள் பாராட்ட தொடங்கி உள்ளது. விஜய் இப்படி செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, அவர் தென்னிந்தியர்கள் எல்லோரையும் ஒரே மாதிரி பார்ப்பது சந்தோசம் அளிக்கிறது என்று செய்தி நிறுவனங்கள் புகழ்ந்து தள்ளி இருக்கிறது.

    கேரளா நிலை

    கேரளா நிலை

    அதேபோல் கேரளாவிலும் விஜயின் இந்த செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவில் ஏற்கனவே விஜய்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட அந்த மாநிலத்திற்கு விஜய் உதவி செய்தது உணர்வு ரீதியாக அவர்களை கவர்ந்துள்ளது. அதேபோல் கேரளா வெள்ளத்தின் போதும் விஜய் கேரளாவிற்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கு நடிகர்கள்

    தெலுங்கு நடிகர்கள்

    ஆந்திர தெலுங்கானாவில் விஜயின் இந்த மூவ் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் பல தெலுங்கு நடிகர்கள் கூட அங்கு முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் அல்லது பிரதமர் நிவாரண நிதிக்கு எதுவும் கொடுக்கவில்லை. ரஜினி சினிமா துறையில் இருக்கும் சில சங்கங்களுக்கு மட்டுமே உதவி செய்துள்ளார்.

    விஜயின் செம மூவ்

    விஜயின் செம மூவ்

    ஆனால் எப்போதாவது அரசியல் பேசும் விஜய் வேகமாக மக்களுக்கு நிதி வழங்கி உள்ளார். அதோடு லாக் டவுன் எல்லாம் சரியான பின் மக்களுக்கு உதவும்படி விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இப்போதே பல்வேறு பகுதிகளில் விஜயின் மக்கள் மன்றத்தினர் உதவி செய்ய தொடங்கி உள்ளனர். விஜயின் இந்த மூவ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Coronavirus: Actor Vijay's help to South Indian states gets huge applause from various sides.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X