சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து 3 தமிழக அமைச்சர்களுக்கு கொரோனா.. மூடப்பட்டது தலைமைச்செயலகம்.. தடுப்பு பணி தீவிரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா வந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழக தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 4000 என்ற எண்ணிக்கையை கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 126581 பேராக உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 46655 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 78161 பேர் தமிழகத்தில் குணமடைந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தமாக இதுவரை மூன்று அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை

இன்று ஏற்பட்டது

இன்று ஏற்பட்டது

இன்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது . செல்லூர் ராஜுவின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவருக்கும் தற்போது கொரோனா வந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன் தமிழக அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேறு யார்?

வேறு யார்?

இதேபோல் அதிமுக எம்எல்ஏக்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி,

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி.

பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன்.

உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (குணமாகிவிட்டார்) ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

எங்கே சென்றனர்

எங்கே சென்றனர்

இதில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி கொரோனா உறுதி செய்யும் முதல் நாள்தான் தலைமைச்செயலகம் வந்து சென்றார். அவர் தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்தார். இதனால் முதல்வர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தங்கமணி உட்பட சில அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வந்து சென்றனர்.

மூடப்பட்டது

மூடப்பட்டது

தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா வந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழக தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளது . தலைமை செயலகத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதால் 2 நாட்களுக்கு மூடப்பட உள்ளது. மொத்தமாக சுத்தம் செய்த பின் மீண்டும் திறக்கப்படும்.

English summary
Coronavirus: After Three ministers get the infection in TN, the secretariat office closed for cleaning purposes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X