சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்த விஜயபாஸ்கர்.. ஒதுங்கும் ராஜேந்திர பாலாஜி.. என்ன நடக்குது?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. அதேபோல் அதிமுக கட்சிக்குள் நிறைய முக்கியமான மாற்றங்கள் நடந்து வருகிறது.

கொரோனா காரணமாக உலகம் முழுக்க அரசியலில் நிறைய அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலே நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. அங்கு அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் வரிசையாக ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் கொரோனா காரணமாக அதிமுக கட்சிக்குள் நிறைய குழப்பங்கள், மாற்றங்கள் நடந்து வருகிறது. கட்சிக்குள் முக்கியமான அமைச்சர்கள் சிலருக்கு இப்போதெல்லாம் அத்தனை முக்கியத்துவம் இல்லை என்று கூறுகிறார்கள்.

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதித்த டாக்டரிடம் வைத்தியம் பார்த்த 900 பேர்... பெண்ணால் பரவியது! டெல்லியில் கொரோனா வைரஸ் பாதித்த டாக்டரிடம் வைத்தியம் பார்த்த 900 பேர்... பெண்ணால் பரவியது!

கட்சியில் யாருக்கு அதிக முக்கியத்துவம்

கட்சியில் யாருக்கு அதிக முக்கியத்துவம்

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்தான் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். ஆனால் கட்சியும், ஆட்சியும் என்னவோ முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதிமுகவை முதல்வர் பழனிசாமிதான் தீவிரமாக கட்டுப்படுத்தி வருகிறார். ஆட்சியின் அமைச்சர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எல்லோரும் முதல்வர் பழனிசாமி பேச்சைதான் கேட்கிறார்கள் என்று ஏற்கனவே செய்திகள் வந்தது.

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

கட்சிக்குள் முதல்வர் பழனிச்சாமி ஜெயலலிதா போல தீவிரமாக அதிரடியாக செயல்பட தொடங்கிவிட்டார் . இதனால் கட்சியில் முக்கியமான நபர்கள் பலர் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். முன்பு எப்படி கட்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒதுக்கப்பட்டாரோ தற்போது தற்போது அதேபோல் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒதுக்கப்படுகிறார். முக்கியமாக சில நாட்களுக்கு முன்தான் ராஜேந்திர பாலாஜியின் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது.

பாஜக தலைவர் கூட நெருக்கம்தான்

பாஜக தலைவர் கூட நெருக்கம்தான்

ராஜேந்திர பாலாஜிக்கும், முதல்வர் பழனிசாமிக்கு பல மாதங்களாக மோதல் இருக்கிறது. இதை உணர்ந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி கட்சிக்குள் பெரிய அளவில் பிரச்சனைகளை செய்யவில்லை. தானாக அவரே பாஜக தலைவர்கள் உடன் நெருக்கம் ஆனார். அதிமுக தலைவர்களை விட பாஜக தலைவர்களுக்கு நெருக்கமாக செயல்பட தொடங்கினார் ராஜேந்திர பாலாஜி. முக்கியமாக தேசிய பாஜக தலைவர்கள் பலர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கம் ஆனார்கள். இது அதிமுகவில் அவரின் செல்வாக்கை குறைத்தது.

விஜயபாஸ்கர் எப்படி

விஜயபாஸ்கர் எப்படி

இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் விஜயபாஸ்கர் தற்போது கட்சிக்குள் புதிய எழுச்சி பெற்றுள்ளார். கொரோனா காரணமாக அதிமுகவில் முதல்வரை விட விஜயபாஸ்கர்தான் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளார். தேசிய அளவில் இவரின் பெயர் கவனிக்கப்படுகிறது. பிரதமர் மோடி கூட முதல்வர்கள் ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறையை பாராட்டியது குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியிலும் விஜயபாஸ்கர் பெரிய அளவில் நற்பெயரை பெற்று உள்ளார்.

முதல்வர் ஸ்கோர் செய்தார்

முதல்வர் ஸ்கோர் செய்தார்

இதனால் சுதாரித்த முதல்வர் நேற்று மக்கள் முன்னிலையில் பேசினார். விஜயபாஸ்கர் ஸ்கோர் செய்வதை பார்த்த முதல்வர் பழனிச்சாமி நேற்று மக்கள் முன்னிலையில் பேசினார். நான் உங்களில் ஒருவன். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன் என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார். அவரின் நேற்றைய பேச்சு பெரிய வரவேற்பை பெற்றது. தானும் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக போராடுகிறேன் என்பதை உணர்த்தும் வகையில் முதல்வர் பழனிச்சாமி இப்படி பேசி உள்ளார்.

கடந்த ஒரு வருடம் எப்படி

கடந்த ஒரு வருடம் எப்படி

முதல்வர் பதவி கையை விட்டு போன சமயத்தில் இருந்தே கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரிய அளவில் வாய்ஸ் இல்லை. கடந்த ஒரு வருடமாக இது அதிகம் ஆனது என்று கூறப்படுகிறது. முக்கியமாக, நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக வென்ற பின்பும், முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட சில அறிவிப்புகளும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் தொண்டர்கள் விசுவாசிகள் பலர் முதல்வர் பக்கம் நெருக்கம் ஆனார்கள்.

கடந்த ஒரு வருடம் எப்படி

கடந்த ஒரு வருடம் எப்படி

இவர்கள் இருவரும் கட்சிக்குள் இப்படி ஸ்கோர் செய்து கொண்டு இருக்க ராஜேந்திர பாலாஜியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், மற்ற முக்கிய அமைச்சர்களும் முக்கியத்துவம் இழந்துள்ளனர். முதல்வர் பதவி கையை விட்டு போன சமயத்தில் இருந்தே கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரிய அளவில் வாய்ஸ் இல்லை. கடந்த ஒரு வருடமாக இது அதிகம் ஆனது என்று கூறப்படுகிறது. முக்கியமாக, நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக வென்ற பின்பும், முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட சில அறிவிப்புகளும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் தொண்டர்கள் விசுவாசிகள் பலர் முதல்வர் பக்கம் நெருக்கம் ஆனார்கள்.

தன்னால் ஒன்றும் முடியவில்லை

தன்னால் ஒன்றும் முடியவில்லை

தற்போது ராஜேந்திர பாலாஜியும் இந்த லிஸ்டில் சேர்ந்து இருக்கிறார். ஆனால் துணை முதல்வர். மக்கள் முன் நல்ல பெயர் வாங்க சரியான சூழ்நிலை இருந்தும் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட முக்கியமான அமைச்சர்கள் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. காரணம் முதல்வர் மற்றும் விஜயபாஸ்கர். இவர்கள் இருவருக்கும் தான் தற்போது கட்சியிலும், ஆட்சியிலும் மரியாதை என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    வாசப்படியில இப்படி செய்யுங்க.. நம்ம கைலதான் இருக்குங்க.. வைரலாகும் மஞ்ச தண்ணி! - வீடியோ
    அதிமுக அரசியல் அழுத்தம்

    அதிமுக அரசியல் அழுத்தம்

    அதிமுக கட்சியில் பல வருடங்களாக இருந்தும் கூட முதல்வர் பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டு பேருக்கும்தான் மரியாதை அதிகம் இருக்கிறது என்று ராஜேந்திர பாலாஜி , ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைக்கிறது. விஜயபாஸ்கர் தொண்டர்கள் சிலர் அவருக்காக வாருங்கால முதல்வரே என்று கூட போஸ்டர்களை இணையத்தில் பறக்க விடுகிறார்கள். இதை எல்லாம் பார்த்து அதிமுகவில் பலர் கலக்கத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

    English summary
    Coronavirus: Amid Pandemic attack What is happening in AIADMK party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X