சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாய்ப்பே இல்லை.. நெருங்கும் ஜூலை 31.. தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா.. ஸ்மார்ட் லாக்டவுன்தான் தீர்வு

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை 31க்கு பிறகு தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்படுமா என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் தினமும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 6993 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 2,20,716 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்று சென்னையில் 1138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 95857 ஆக உயர்ந்துள்ளது.

தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.. என எல்லா மாவட்டங்களிலும் கொரோனா கிடுகிடு.. வெளியான லிஸ்ட் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.. என எல்லா மாவட்டங்களிலும் கொரோனா கிடுகிடு.. வெளியான லிஸ்ட்

அதிகரிக்கிறது

அதிகரிக்கிறது

தமிழகத்தில் இன்று மட்டும் இப்படி அதிகமாக கேஸ்கள் வரவில்லை. நேற்று தமிழகத்தில் 6986 கேஸ்கள் வந்தது. கடந்த 25ம் தேதி தமிழகத்தில் 6988 கேஸ்கள் வந்தது. கடந்த 24ம் தேதி தமிழகத்தில் 6785 கேஸ்கள் வந்தது.கடந்த 23ம் தேதி தமிழகத்தில் 6472 கேஸ்கள் வந்தது. கடந்த 22ம் தேதி தமிழகத்தில் 5869 கேஸ்கள் வந்தது.அதாவது கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வேகமாக கேஸ்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

காரணம்

காரணம்

தமிழகத்தில் இப்படி மொத்தமாக கேஸ்கள் உயர்த்தப்பட சொல்லப்படும் மிக முக்கியமான காரணம் டெஸ்டிங். தமிழகத்தில் 30 ஆயிரமாக இருந்த கொரோனா சோதனைகள் தற்போது வேகமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு செய்யப்படும் மொத்த கொரோனா சோதனைகள் 62 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சில நாட்கள் 62 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் கூட தமிழகத்தில் செய்யப்படுகிறது.

கொஞ்சம் கூட குறையவில்லை

கொஞ்சம் கூட குறையவில்லை

தமிழகத்தில் சோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க கேஸ்களும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிலும் தமிழகத்திற்கு உள்ளே இருக்கும் மாவட்டங்களில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் ஓரளவிற்கு கேஸ்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் உள்மாவட்டங்களில் கேஸ்கள் வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. கேஸ்கள் குறைவதற்கான அறிகுறிகள் கொஞ்சம் கூட இல்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதியோடு தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் முடிகிறது. இதனால் தமிழகத்தில் லாக்டவுன் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னொரு பக்கம் தொடர்ந்து உள்மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா லாக்டவுனை தளர்த்த வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள்.

என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

தமிழக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதல்வர் பழனிசாமி இடையே நடந்த ஆலோசனையிலும் இதே விஷயத்தை ஆட்சியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. அதாவது லாக்டவுன் தளர்வு வேண்டாம். மீண்டும் ஆகஸ்ட் முடியும் வரை லாக்டவுன் தொடரட்டும் என்று ஆட்சியர்கள் கூறி உள்ளனர். முதல்வர் பழனிசாமியும் இதற்கு ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட் லாக்டவுன்

ஸ்மார்ட் லாக்டவுன்

ஆனால் மொத்தமாக மாநிலம் முழுக்க லாக்டவுன் கொண்டு வர வாய்ப்பு இல்லை என்கிறார்கள். அதிகமாக கேஸ்கள் வரும் மாவட்டங்களில் மட்டும் ஸ்மார்ட் லாக்டவுனை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதாவது மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை போன்ற சில மாவட்டங்களில் மட்டும் மொத்தமாக முழு லாக்டவுனை கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சென்னை கொடுத்த பாடம்

சென்னை கொடுத்த பாடம்

சென்னையில் முழு லாக் டவுன் காரணமாக கொரோனா கேஸ்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதேபோல் மற்ற சில மாவட்டங்களில் மட்டும் முழு லாக்டவுன் கொண்டு வரலாம். மொத்தமாக மற்ற மாவட்டங்களில் லாக்டவுனை நீக்கிவிட்டு, சில மாவட்டங்களில் மட்டும் அதிக கட்டுப்பாட்டுடன் கூடிய லாக்டவுன் வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். விரைவில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை இதில் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

English summary
Coronavirus: As the end of Lockdown comes on July 31, The Cases in Tamilnadu surges,.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X