சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடாஸ், ஹூண்டாய் மோட்டார் நிறுவனங்கள் முதல்வர் நிதிக்கு தலா ரூ5 கோடி- சிஎஸ்கே ரூ 1கோடி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ134 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், அடாஸ் நிறுவனம் ஆகியவை தலா ரூ5 கோடி வழங்கியுள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Coronavirus: ATOS, Hyundai Motor donate Rs 5 crore to TN CM relief fund

கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு என முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 6.4.2020 அன்று வரை, மொத்தம் 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 7.4.2020 முதல் 13.4.2020 ஆகிய ஏழு நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

தமிழ்நநாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்கள் சார்பாக 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய்

  • அடாஸ் சின்டல் ப்ரெயாஸ் கூட்டமைப்பு 5 கோடி ரூபாய்
  • ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் 5 கோடி ரூபாய்
  • சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் 3 கோடி ரூபாய்
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் 2 கோடி ரூபாய்
  • டீயூப் இண்வெஸ்ட்மெண்ட்ஸ் 2 கோடி ரூபாய்
  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 கோடி ரூபாய்
  • காமராஜர் துறைமுகம் லிமிடெட் 1 கோடி ரூபாய்
  • சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் 1 கோடி ரூபாய்
  • EICHER நுஐஊழநுசு குரூப் 1 கோடி ரூபாய்

தலா ரூ50 லட்சம் நிதி உதவி வழங்கியவர்கள்

  • நடிகர் திரு. அஜித்குமார்
  • டால்மியா சிமெண்ட் பாரத் லிமிடெட்
  • ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட்
  • கோரமண்டல் எலக்ட்ரிக் கம்பெனி லிமிட்டெட்
  • தி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிட்டெட்
  • OLA பவுண்டேசன்
  • செயின்ட் கோபென்

தலா ரூ25 லட்சம் நிதி உதவி வழங்கியவர்கள்:

  • நடிகர் திரு சிவகார்த்திகேயன்
  • சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்
  • P&Cபுராஜக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
  • ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்
  • திரு ஆர். ஆனந்தகிருஷ்ணன்
  • டோட்லா டைரி லிமிடெட்

இதர:

  • தமிழ்நாடு ஸ்ரீ சீர்வி சமாஜ் மஹா சபா 21 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்
  • பூலிங் ஏசி 20 லட்சம் ரூபாய்
  • விஜயா மருத்துவமனை 15 லட்சம் ரூபாய்
  • சத்தியமூர்த்தி கோ 12 லட்சம் ரூபாய்
  • CMK புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 12 லட்சம் ரூபாய்
  • RMK பொறியியல் கல்லூரி (சம்பளக் கணக்கு) 11 லட்சத்து 61 ஆயிரத்து 790 ரூபாய்
  • தி கரூர் வைஸ்யா வங்கி 11 லட்சம் ரூபாய்
  • அகர்வால் ரிலிஃப் & எஜுகேஷனல் டிரஸ்ட் 11 லட்சம் ரூபாய்
  • சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் 10 லட்சத்து 52 ஆயிரத்து 768 ரூபாய்
  • ஸ்ரீவெங்கடாச்சலபதி அன்கோ 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்

தலா ரூ10 லட்சம் வழங்கியவர்கள்:

  • சுந்தரபரிபூரணன் பக்சிராஜன்
  • கணேஷ் நடராஜன்
  • ஜெயப்ரியா சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட்
  • TNEB ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்புகளின் சங்கம்
  • தமிழ்நநாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்
  • கொங்குநாடு ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட்
  • ஸ்ரீ காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்
  • அரவிந்ந் லேபாரட்டரிஸ்
  • TCSRD
  • சரளா கிருஷ்ணன்
  • ரகுநாத் ஜி சுப்ரமண்யன்
  • E.வேலு
  • பிஸ்மி பிஷரீஸ் (Fisheries)
  • இந்தியன் மெட்
  • எம்.எஸ் தி இந்தியன் ஆபீஸர்ஸ் அசோசியேஷன்
  • சுந்தரவேல் மார்க்கெட்டிங் கம்பெனி (பி) லிட்.
  • வெரிஷான் டேட்டா சர்வீஸஸ் (பி) லிட்.

மேற்கண்ட ஏழு நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 54 கோடியே 88 இலட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் ஆகும். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

English summary
ATOS and Hyundai Motor India Ltd had donated Rs 5 crore to Tamil Nadu Chief Minister Relief Fund towards its contribution in the fight against coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X