சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முஸ்லீம்களை தூண்டித்தான்.. திமுகவை வளர்க்கணுமா.. நல்லது செய்யவே தெரியாதா.. பிகேவுக்கு காயத்ரி கேள்வி

திமுகவுக்கு பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பிரசாந்த் கிஷோர் முஸ்லிம்களை தூண்டி விடுகிறார்.. போலி ஐடிகள் மூலம் மீம்ஸ்கள் போட வைக்கிறார்.. பிரசாந்த் கிஷோர் வாங்கிய 380 கோடிக்கு இப்படிச் செய்வது சிறந்ததா? இது தான் உங்கள் உத்திகளா? இந்த பணத்தை ஏன் ஆஸ்பத்திரிகளுக்கும், ஸ்கூல்களுக்கும் செலவு பண்ண முடியாதா? என்று திமுகவை பார்த்து பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம் காட்டமான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

கடந்த சில தினங்களாகவே ஒரு குற்றச்சாட்டு திமுக மீது வைக்கப்பட்டு வருகிறது.. "வைரஸால் உலகநாடுகள் திணறி வருகின்றன. இதனால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் நாடுகள் தவித்து வருகின்றன.

இந்நிலையில், நம் நாட்டில் மக்களை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் உதவிக்கரம் நீட்டி கொண்டிருக்கிறார்கள்... ஆனால் தி.மு.க எதுவும் செய்யவில்லை, பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று பாஜக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

இதற்கு அப்போதே திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.. "மக்களுக்கு திமுக சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற தொனியில் பாஜகவினர் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்கிறார்கள், இது கண்டிக்கத்தக்கது.. திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தையும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பணத்தை ஒதுக்கியுள்ளனர் என்றும் விளக்கம் தெரிவித்திருந்தது.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

நாங்கள் பணம் தந்ததற்கு ஆதாரம் இருக்கா? இந்த நேரத்தில் தேவையில்லா பிரசாரம் ஏன் செய்ய வேண்டும்? தரம்தாழ்ந்த அரசியலை பாஜக செய்யலாமா? என்று கேட்டு பாஜக தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்பட்டது. எனினும், இந்த விஷயத்தை இப்போது காயத்ரி ரகுராம் மீண்டும் கிண்டிவிட்டு, ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "பிரதமர் மோடிக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்... ஏனென்றால் அவருக்கு மோடி தேவை... ஆனால் இன்று திமுகவுக்கு பிகே தேவை.. ஏனென்றால், பிகேவிற்கு ஒரு சான்ஸை ஏற்கனவே மோடி தந்திருந்தார்.

மீம்கள்

மீம்கள்

யுக்திகளை வகுக்கும் ஒரு தமிழரை திமுகவால் கண்டுபிடிக்க முடியவில்லையா? இன்று திமுகவுக்காக 380 கோடிக்கு பணிபுரியும் பிரசாந்த் கிஷோர் முஸ்லிம்களைத் தூண்டிவிடுவதை உத்தியாக மேற்கொள்கிறார். அதோடு போலி ஐடிகள் மூலம் மீம்ஸ்களையும் போட வைக்கிறார்.

380 கோடியா?

380 கோடியா?

பிரசாந்த் கிஷோர் வாங்கிய 380 கோடிக்கு இப்படி செய்வது சரியா? போலி ஐடி மூலம் மீம்ஸ் போட எதுக்கு 380 கோடி செலவு செய்ய வேண்டும்? இதான் உங்க யுக்தியா? திமுகவுக்கு சொந்தமாக சொந்தமாக உத்திகளை பயன்படுத்தி திட்டங்கள் எதுவும் போட தெரியாதா? அந்த 380 கோடியை அரசு ஆஸ்பத்திரிகள், அரசுப் பள்ளிகளுக்கு ஏன் செலவிட முடியாது? அதை இப்போது வரைக்கும் ஏன் திமுக செய்யவில்லை? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

கமெண்ட்கள்

கமெண்ட்கள்

இதற்கு ஏகப்பட்ட கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.. ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி பதில் தெரிவித்து வருகின்றனர்.. "பட்டேலுக்கு 3000 கோடில சிலை வைக்கும்போதே உங்க Strategy மக்கள் பாத்துருப்பாங்க" என்றும் "அந்த Interview ல அவர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாம இங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க" என்றும் காயத்ரியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

English summary
coronavirus: bjp politician gayathiri raghuram has criticized dmk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X