• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கமல் கடிதத்தை சாடிய எச். ராஜா.. மதுவந்தி, காயத்ரி ரகுராம் வாய்களுக்கு டேப் ஒட்ட சொன்ன நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: "நான் எழுதித் தரேன்.. மோடிக்கு கொரோனா இருக்கு.. அவனை டெஸ்ட் பன்னு-னு பேசமுடியும். இல்லாத பிரச்சனைகள் உள்ளதாக விவாதிக்க முடியும். ஒன்னுமே புரியாத கடிதமும்" என்று மறைமுகமாக கமல்ஹாசன் கடிதத்தை வாரி ட்வீட் போட்டுள்ளார் எச்.ராஜா! இதற்கு ட்விட்டர்வாசிகள், "ராஜா சார், இந்த காயத்ரி ரகுராம் மற்றும் மதுவந்தி வாய்க்கு டேப் ஒட்டி விடுகிறீர்களா?" என்று மூத்த தலைவர் எச்.ராஜாவிடமே முறையிட்டு வருகின்றனர்!!

  8000 கோடி மக்களுக்கு 5000 கோடி பணமா.. அடித்து விட்ட மதுவந்தி.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! - வீடியோ

  மநீம தலைவர் கமல்ஹாசன் பிரதமருக்கு பகிரங்கமான கடிதம் எழுதியபோது, அதை முதல் ஆளாக வந்து கண்டித்தது காயத்ரி ரகுராம்தான்.

  தீவிர பாஜக ஆதரவாளரான இவர், "நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத, கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா?

  டிரண்ட்

  டிரண்ட்

  தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள். பிரதமர் மோடிக்கு லட்டர் எழுதுவது ஒரு டிரெண்ட் ஆகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்கள் எல்லாரும் தங்கள் ஒற்றுமையை காட்டினார்கள்... அதில் நீங்க ஏன் பங்கேற்கவில்லை.. உங்களுக்கு உறுத்தவில்லையா?" என்று கேட்டிருந்தார். இந்த சமயத்தில் காயத்ரி ரகுராம் நண்பர் ஒருவர் ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

  பிரதமர்

  பிரதமர்

  அதில், "இந்த நாட்டில் பிரதமர் எதை செய்தாலும் அதற்கு எப்போது குறை சொல்லலாம் என்று காத்திருக்கிறார்கள்... பிரதமர் எந்த விஷயத்திலாவது தோற்றுவிட மாட்டாரா, அப்போதுதானே அவரை வீழ்த்தவும், கிண்டல் செய்யவும் முடியும் என்று காத்திருக்கிறர்கள்.. இப்படிப்பட்ட வேலையை செய்வது படித்தவர்கள்தான்.. ஆனால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் சாய்க்க நினைப்பது பிரதமரை மட்டுமல்ல, ஒரு நாட்டையே! என்கிற ரீதியில் ட்வீட் போட்டிருந்தார். இந்த ட்வீட்டினை தன்னுடைய ட்விட்டரில் டேக் செய்து, என் நண்பன் சொன்ன இந்த கருத்தை முழுசுமாக ஆதரிக்கிறேன் என்று காயத்ரி ரகுராம் பதிலளித்திருந்தார்.

  அதிகாரங்கள்

  அதிகாரங்கள்

  காயத்ரி பதிவிட்ட இந்த ட்வீட் எச்.ராஜா கண்ணில் பட்டுள்ளது.. அதனை தன்னுடைய ட்வீட்டில் டேக் செய்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், "கொரோனா பாதிக்கப்பட்ட பல நாட்டின் அரசுகள் அவசரகால அதிகாரங்களை கையிலெடுத்துள்ளனர். அரசை விமரிசிக்க முடியாது... உடனே சிறைதான். ஆனால் இங்கு நான் எழுதித் தரேன் மோடிக்கு கொரோனா இருக்கு அவனை டெஸ்ட் பன்னு னு பேசமுடியும். இல்லாத பிரச்சனைகள் உள்ளதாக விவாதிக்க முடியும். ஒன்னுமே புரியாத கடிதமும்" என்று மறைமுகமாக கமலை ட்வீட் போட்டு வாரியுள்ளார் எச்.ராஜா!

  பசிக்கு அழும் குரல்

  பசிக்கு அழும் குரல்

  இதற்கு ஏராளமானோர் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "சாப்பாடு க்கு வழி காட்டுங்க பாஸ்... நிறைய பசிக்கு அழும் குரலை இனி கேட்பீர்கள்." என்றும், இந்த இக்கட்டான நேரத்தில் நமது நாடு,நமது பிரதமர் என்ற உணர்வோடு (நமது விருப்பு வெறுப்புகளை பரணில் வைத்து விட்டு) செயல்படவேண்டும். ஆனால், ராஜா சார், இந்த காயத்ரி ரகுராம் மற்றும் மதுவந்தி வாய்க்கு டேப் ஒட்டி விடுகிறீர்களா?" என்றும் எச்.ராஜாவுக்கு பதிலளித்து வருகின்றனர்!

  English summary
  coronavirus: bjp senior leader h raja has criticized kamalhasans letter
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X