சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு.. காரணம் என்ன தெரியுமா? இனிதான் முக்கிய கட்டம் மக்களே

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.11 லட்சத்தை தாண்டியது.

தமிழகத்தில் 95 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. நேற்று 34 ஆயிரத்து, 831 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில்தான், 4,150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்களோ.. ஊரடங்கு தளர்வு.. ஒரேயடியாக சாலையில் கூட்டம் அதிகரிப்பு சென்னையை ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்களோ.. ஊரடங்கு தளர்வு.. ஒரேயடியாக சாலையில் கூட்டம் அதிகரிப்பு

சென்னை நிலவரம்

சென்னை நிலவரம்

சென்னையில், 1,713 பேருக்கு பாதிப்பு பதிவானது. செங்கல்பட்டில், 274, காஞ்சிபுரத்தில் 152, மதுரையில் 308 பேருக்கு பாதிப்பு பதிவானது. இதுவரை, சென்னையில், 1,054 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும், 1,510 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில், தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 2,000த்துக்கும் மேல் இருந்து வந்த நிலையில், நேற்று, 1,713 ஆக குறைந்து உள்ளது. அதற்கு முந்தைய தினமான, ஜூலை 4ம் தேதிசென்னையில் 1,842 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதிக அளவு

அதிக அளவு

வெகு நாட்களுக்கு பிறகு ஜூன் 4ம் தேதி முதல்தான், 2000த்துக்கு கீழே தினசரி கேஸ்கள் எண்ணிக்கை பதிவாக ஆரம்பித்துள்ளது சென்னையில். மொத்த கொரோனா கேஸ்களில் சென்னை நகரத்தின் பங்கு 62% என்ற அளவுக்கு இருந்தாலும், சமீப காலமாக பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து சென்னையில், பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

தினசரி எண்ணிக்கை

தினசரி எண்ணிக்கை

தினசரி புள்ளி விவர அடிப்படையில் பார்த்தால், சென்னையின் கொரோனா பங்களிப்பு 43% ஆகக் குறைந்துள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்ததற்காக மகிழ்வதா, அல்லது பிற பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துவிட்டதே என நினைப்பதா என புரியவில்லை.

லாக்டவுன்

லாக்டவுன்

அதேநேரம், ஜூன் 19ம் தேதி முதல் தொடர்ச்சியாக சென்னையில் விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் கொரோனா கட்டுப்பாட்டுக்கு உதவியுள்ளது என்கிறார்கள் சில வல்லுநர்கள். இதை பயன்படுத்தி சென்னை சுதாரிக்க வேண்டும். வெளியிடங்களில் யாருடனும் நெருங்கி பழகக் கூடாது. மாஸ்க் அணியாமல் வெளியே செல்லக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே இனிதான், முக்கியமான கட்டம் என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த வாய்ப்பை மட்டும் தவற விட்டுவிடாதீர்கள் மக்களே.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1747 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தொடர்ந்து 3வது நாளாக 2000த்தை விடவும் குறைவாக கொரோனா பாதிப்பு சென்னையில் பதிவாகியுள்ளது.

அதிக அளவு

அதிக அளவு

வெகு நாட்களுக்கு பிறகு ஜூன் 4ம் தேதி முதல்தான், 2000த்துக்கு கீழே தினசரி கேஸ்கள் எண்ணிக்கை பதிவாக ஆரம்பித்துள்ளது சென்னையில். மொத்த கொரோனா கேஸ்களில் சென்னை நகரத்தின் பங்கு 62% என்ற அளவுக்கு இருந்தாலும், சமீப காலமாக பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து சென்னையில், பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

தினசரி எண்ணிக்கை

தினசரி எண்ணிக்கை

தினசரி புள்ளி விவர அடிப்படையில் பார்த்தால், சென்னையின் கொரோனா பங்களிப்பு 43% ஆகக் குறைந்துள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்ததற்காக மகிழ்வதா, அல்லது பிற பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துவிட்டதே என நினைப்பதா என புரியவில்லை.

லாக்டவுன்

லாக்டவுன்

அதேநேரம், ஜூன் 19ம் தேதி முதல் தொடர்ச்சியாக சென்னையில் விதிக்கப்பட்டிருந்த லாக்டவுன் கொரோனா கட்டுப்பாட்டுக்கு உதவியுள்ளது என்கிறார்கள் சில வல்லுநர்கள். இதை பயன்படுத்தி சென்னை சுதாரிக்க வேண்டும். வெளியிடங்களில் யாருடனும் நெருங்கி பழகக் கூடாது. மாஸ்க் அணியாமல் வெளியே செல்லக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே இனிதான், முக்கியமான கட்டம் என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த வாய்ப்பை மட்டும் தவற விட்டுவிடாதீர்கள் மக்களே.

English summary
Corona virus impact in Chennai has slowed. Health experts say there is an important reason for this.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X