சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு.. மகாராஷ்டிரா, கேரளாவையடுத்து 3வது இடம் பிடித்தது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 57 என்ற அளவுக்கு அதிகரித்ததால், இந்த பட்டியலில், நாட்டிலேயே 3வது இடத்தை பிடித்துள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு... என்ன காரணம்?

    ஆரம்பத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால், டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பலர் திரும்பியதும், அவர்களில் 50 பேருக்கு, கொரோனா இருப்பதும், உறுதியாகியுள்ளது. எனவே இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    Coronavirus cases: Tamilnadu is in 3th place in India

    இதையடுத்து, கர்நாடகா, டெல்லி போன்றவற்றை முந்தி, நாட்டிலேயே 3வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் 277 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். எனவே மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 1,450ஆக உள்ளது, 148 பேர் குணமடைந்துள்ளனர் அல்லது வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    கொரோனாவால், மகாராஷ்டிராவில் அதிக இறப்புகள் (10) பதிவாகியுள்ளன. குஜராத் (6), பஞ்சாப் (4), மத்தியப் பிரதேசம் (4), கர்நாடகா (3), மேற்கு வங்கம் (3), டெல்லி (2), கேரளா (2), தெலுங்கானா (2) மற்றும் ஜம்மு-காஷ்மீர் (2). தமிழகம், பீகார் மற்றும் இமாச்சலப் பிரதேசம் தலா ஒரு இறப்பைப் பதிவு செய்துள்ளன.

    ஏப்ரல் 2வது வாரம் இந்தியாவில் அவசர நிலை பிரகடனமா? தீயாய் பரவிய போலி மெசேஜ்.. ராணுவம் மறுப்புஏப்ரல் 2வது வாரம் இந்தியாவில் அவசர நிலை பிரகடனமா? தீயாய் பரவிய போலி மெசேஜ்.. ராணுவம் மறுப்பு

    இதுவரை, உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோயாளிகள் எண்ணிக்கையில், 302 நோயாளிகளுடன், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் 241 நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், 3வது இடத்தில் உள்ளது. டெல்லியில் நோயாளிகள் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளன.

    கர்நாடகா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் தலா 101 நோயாளிகள் உள்ளனர். தெலுங்கானாவில் 77 ஆகவும், குஜராத்தில் 74 ஆகவும் அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் நோயாளிகள் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 55 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை, உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோயாளிகள் எண்ணிக்கையில், 302 நோயாளிகளுடன், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் 241 நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், 3வது இடத்தில் உள்ளது. டெல்லியில் நோயாளிகள் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளன. கர்நாடகா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் தலா 101 நோயாளிகள் உள்ளனர். தெலுங்கானாவில் 77 ஆகவும், குஜராத்தில் 74 ஆகவும் அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் நோயாளிகள் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 55 ஆக உயர்ந்துள்ளது.

    English summary
    Tamilnadu become 3rd largest state in-terms of coronavirus cases counting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X