சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில்தான் அதிகம்.. தலைநகரில் தொடர்ந்து உயரும் கொரோனா பலி எண்ணிக்கை.. அதிர வைக்கும் காரணங்கள்!

தமிழகத்தில் தினமும் கொரோனா காரணமாக பலியாகும் நபர்களில் சென்னையில்தான் அதிகமான நபர்கள் பலியாகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தினமும் கொரோனா காரணமாக பலியாகும் நபர்களில் சென்னையில்தான் அதிகமான நபர்கள் பலியாகிறார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 646 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 லிருந்து 17,728ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து மட்டும் 509 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே இருந்த பிரச்சனை.. இன்று மட்டும் 9 கொரோனா மரணங்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்!ஏற்கனவே இருந்த பிரச்சனை.. இன்று மட்டும் 9 கொரோனா மரணங்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்!

சென்னை எண்ணிக்கை

சென்னை எண்ணிக்கை

இந்த நிலையில் தமிழகத்தில் தினமும் கொரோனா காரணமாக பலியாகும் நபர்களில் சென்னையில்தான் அதிகமான நபர்கள் பலியாகிறார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் வரை பலி எண்ணிக்கை தினமும் 4 என்று எண்ணிக்கையில் இருந்தது. தினமும் அதிகமாக 4 பலி எண்ணிக்கை வருவதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளது.

அதிகம் ஆகிறது

அதிகம் ஆகிறது

தமிழகத்தில் தற்போது தினமும் 6-7 பேர் பலியாகிறார்கள். அதிலும் நேற்று 7 பேர் தமிழகத்தில் பலியானார்கள். அதேபோல் இன்று 9 பேர் பலியானார்கள். இன்று பலியான 9 பேரில் 8 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். நேற்று
பலியான 7 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் தினமும் கொரோனா காரணமாக பலியாகும் நபர்களில் சென்னையில்தான் அதிகமான நபர்கள் பலியாகிறார்கள்.

என்ன காரணம்

என்ன காரணம்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. சென்னையில்தான் தினமும் அதிக அளவு கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இங்கு 3000-4000 கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் அதிக கேஸ்கள் வருகிறது.

அதிக டெஸ்ட்

அதிக டெஸ்ட்

சென்னையில் தினமும் சராசரியாக 500-600 கேஸ்கள் வருகிறது. பொதுவாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க பலி எண்ணிக்கையும் அதிகம் ஆகும். இதனால் சென்னையில் அதிக கேஸ்கள் உள்ளதால் பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அதேபோல் சென்னையில்தான் வயதான நபர்கள் அதிகமாக கொரோனா பாதிப்போடு அனுமதிக்கப்படுகிறார்கள்.

வயது காரணம்

வயது காரணம்

அதாவது சென்னையில்தான் அதிகமாக 50 வயதுக்கும் அதிக உள்ள நபர்கள் அதிகம் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் அதிகமாக மரணங்கள் சென்னையில் ஏற்படுகிறது. இதெல்லாம் போக சென்னையில் கொரோனா காரணமாக அனுமதிக்கப்படும் நபர்களில் பலர் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் இவர்களுக்கு சிகிச்சை அழிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. முதலிலேயே கொரோனா இருப்பதை கண்டுபிடித்தால் மிக எளிதாக குணப்படுத்தலாம்.

கடைசி நேரம் காரணம்

கடைசி நேரம் காரணம்

ஆனால் இவர்களுக்கு கடைசி நேரத்தில்தான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அறிகுறியும் அதிகமாக சென்னையில் இல்லை. இதனால் சென்னையில் கொரோனா நோயாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவர்கள் பலியாகிவிடுகிறார்கள். பலருக்கு கொரோனா காரணமாக மரணம் ஏற்பட்ட பின்புதான் கொரோனா இருப்பதே சென்னையில் கண்டுபிடிக்கப்படுகிறது.

வேறு சில காரணம்

வேறு சில காரணம்

அதேபோல் சென்னையில் கொரோனா காரணமாக அனுமதிக்கப்படும் பலருக்கு ஏற்கனவே வெவ்வேறு நோய்கள் இருக்கிறது. இப்படி வெவ்வேறு நோய்களோடு அனுமதிக்கப்படும் நபர்கள் அதிகமாக கொரோனா காரணமாக சென்னையில் பலியாகிறார்கள். தமிழகத்தில் பலியாகும் 84% பேருக்கு கோமார்பரிட்டி எனப்படும் இதய பிரச்சனை, வயோதிகம், பிற நோய்கள் உள்ளது . கோமார்பரிட்டி இல்லாத 16% பேர் பலியாகி உல்ளனர்.

Recommended Video

    கொரோனா வைரஸ் வெறும் தொடக்கம் தான் - Bat Women எச்சரிக்கை
    சர்க்கரை வியாதி காரணம்

    சர்க்கரை வியாதி காரணம்

    அதேபோல் தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன் அதிகம் இருக்கும் நபர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள். ரத்த கொதிப்பு இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.இதில் சென்னையில்தான் அதிகமான நபர்கள் இருக்கிறார்கள். இதனால்தான் சென்னையில் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக பலி எண்ணிக்கை இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: Chennai has more number of death in Tamilnadu - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X