சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி!

சென்னையில் இதுவரை பதிவான கொரோனா கேஸ்களில் இன்றுதான் மிக அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இதுவரை பதிவான கொரோனா கேஸ்களில் இன்றுதான் மிக அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது.இன்று வரை சென்னையில் 9989 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15512 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

முன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை!முன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை!

சென்னை நிலை

சென்னை நிலை

சென்னையில் இதுவரை பதிவான கொரோனா கேஸ்களில் இன்றுதான் மிக அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் முழுக்க தினமும் 400-500 கேஸ்கள் வந்தது. இந்த வாரம் 500-600 கேஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் திடீர் என்று தற்போது கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரே நாளில் 624 கேஸ்கள் இன்றுக்கு மட்டும் தமிழகத்தில் வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தடுப்பு

தடுப்பு

சென்னையில் கொரோனா கேஸ்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்னையில் கொரோனாவை தடுக்க நிறைய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. சென்னைக்கு என்று தனியாக கொரோனா தடுப்பு திட்டங்கள் போடப்பட்டது.

எப்படி நடக்கிறது

எப்படி நடக்கிறது

சென்னையில் மட்டும் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் விதிகள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் சென்னையில்தான் தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட அதிகமாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் அதையும் மீறி சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் பல்வேறு தடுப்பு பணிகளை செய்தும் கொரோனா கேஸ்கள் ஏன் அதிகரிக்கிறது, எப்படி அதிகரிக்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

நிறைய கேள்வி

நிறைய கேள்வி

சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகமாக செய்வதால் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகரிக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. அல்லது கொரோனா உண்மையில் பலருக்கு பரவி உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. சமூகத்தில் பலருக்கு கொரோனா பரவி இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கண்டிப்பாக சமூக பரவல் ஏற்பட்டு இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்டேஜ் 3 ஆ?

ஸ்டேஜ் 3 ஆ?

இந்த நிலையில் தற்போது சென்னையில் கேஸ்கள் அதிகரிக்கிறது. இதனால் சென்னையில் ஸ்டேஜ் 3 இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கோயம்பேடு காரணமாக ஏற்பட்ட கொரோனா கேஸ்கள் முடிந்துவிட்டது என்றும் கூறப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கேஸ்கள் அதிகரிக்கிறது. இதனால் இன்னும் கோயம்பேடு கேஸ்கள் வருகிறதா அல்லது வேறு ஏதாவது கிளஸ்டர் சென்னையில் உருவாகி விட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.

கோயம்பேடு காரணமா?

கோயம்பேடு காரணமா?

சென்னையில் உண்மையில் கொரோனா அதிகரிக்க கோயம்பேடு மட்டும்தான் காரணமாக என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவை தடுக்க தமிழக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. மிக சிறப்பாக பணிகளை செய்து வருகிறது, பல முக்கிய அதிரடி முடிவுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. தற்போது அதே போல் தமிழக அரசு சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் என்கிறார்கள்.

English summary
Coronavirus: Chennai records the highest case ever today, which is 624.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X