• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அய்யயே.. எதை எடுத்து எப்படி சாப்பிடறார் பாருங்க.. அப்புறம் "அது" வராம என்ன செய்யும்?

|

சென்னை: இது எந்த ஊரு.. என்ன நாடு ஒன்னும் தெரியலை.. ஆனால் அந்த நபரையும் அவர் சாப்பிடுவதையும் பார்த்தே நமக்கு பீதியாகுது!

உலகமெங்கும் தற்போது பரபரப்பாக உள்ள மேட்டர் என்னென்னா அது கொரோனா வைரஸ் தாக்கம்தான். சீனாவை போட்டு உலுக்கி எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உலக மக்கள் தொகையில் நம்பர் ஒன் நாடான சீனா தவித்துக் கொண்டுள்ளது. ஆனாலும் அந்த நாட்டு மக்கள் விலங்குகளை சாப்பிடுவதை விடுவதாக இல்லை.

சீனர்கள்

சீனர்கள்

இந்த வைரஸ் தாக்குதலானது பாம்பு, வவ்வால் ஆகியவற்றிலிருந்துதான் பரவியதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஒரு குரூப் பாம்புக் கறி சாப்பிடுவதை நிறுத்தி வைத்துள்ளது. வவ்வாலையும் இப்போதைக்கு விட்டு வைத்துள்ளனர். சீனர்கள் பாம்பு, நாய் என எதையும் விடுவதில்லை என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில்தான் ஒரு வைரல் வீடியோ வெளியாகி பீதியைக் கிளப்பியுள்ளது.

ஜப்பானியர்

ஜப்பானியர்

அது எந்த நாடு.. ஊர் என்று தெரியவில்லை. ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவரைப் பார்த்தால் சீனர் போலத்தான் தெரிகிறது. ஜப்பானியரா என்றும் சந்தேகமாக உள்ளது. அவரது ஒரு கையில் ஒரு புட்டியில் எதையோ ஏந்தியுள்ளார். மதுவாக இருக்கலாம். மறு கையில் சீனர்கள் சாப்பிட பயன்படுத்தும் 2 குச்சி இருக்கு. அந்த குச்சியால் பீங்கான் கின்னத்தில் உள்ளதை எடுக்கிறார்.

சுண்டெலிகள்

அவர் எடுப்பதுதான் இங்கு மேட்டரே. அதாவது அந்த பீங்கான் கின்னத்தில் உயிருடன் சில எலிகள் கிடக்கின்றன. அரை மயக்க நிலையில் உள்ளன. எல்லாமே அழகு அழகாக இருக்கும் குட்டி குட்டி சுண்டெலிகள். அதை ஒவ்வொன்றாக எடுக்கிறார் அந்த சீனர். பின்னர் அதை அப்படியே வாயில் போட்டு வெற்றிலை மெல்லுவது போல மெல்லுகிறார். அதுவும் எப்படி ருசித்து, ரசித்தபடி.. கண்ணை வேறு மூடிக் கொண்டு.

நடிகர் ஸ்ரீமன்

பிறகு சுவை நல்லாருக்கு என்பது போல லயித்துப் போய் தலையை அசைத்துச் சொல்கிறார். இப்படியே ஒவ்வொரு எலியாக சாப்பிடுகிறார்.. ஏதோ முக்குக் கடையில் போண்டா வாங்கி சாப்பிடுவது போல ஜாலியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை நம்ம ஊர் நடிகர் ஸ்ரீமன் போட்டு விட்டுள்ளார். அதற்கு வந்த கமெண்டுகள் ஏராளம்.

இதே கேள்விதான்

இதே கேள்விதான்

ஏம்ப்பா.. இப்படி கண்டதையும் சாப்பிட்டா வைரஸ் வராம என்னய்யா வரும் என்று ஒருவர் கமெண்ட் விட்டுள்ளார். அதற்கு ஸ்ரீமன், என்ன செய்வது சாப்பிடுபவருக்கு இல்லை,, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத அப்பாவிகளைத்தான் இந்த வைரஸ் தாக்குகிறது என்று கூறியுள்ளார் ஸ்ரீமன். நமக்கும் இதேதான் கேள்வி எழுகிறது. இப்படி உயிருடன் சாப்பிடுகிறாரே.. இந்த எலி மூலமாக எந்தக் கருமமாவது பரவாதா.. ஒன்னுமே புரியலை!!

குறிப்புகள்

குறிப்புகள்

சீமானை போலவே நடிகர் பார்த்திபனும் கொரோனா வைரஸ் குறித்து கூறியுள்ளார்.. ஆனால் சற்று வித்தியாசமாக அவருக்கே உரிய பாணியில் டிப்ஸ் தந்து தடுப்பு முறைகளை கூறியுள்ளார். அதில், "கொரோனா வைரஸ் அதிகமாக பரவ தொடங்கியிருப்பதால், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மூலம் விஷ காய்ச்சலிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி?

டிப்ஸ்

1. வெறும் வயிற்றில் நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம். 2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கிலோய் (அம்ருதா / குடூச்சி/ சீந்தில்கொடி) கஷாயம் உட்கொள்ளலாம். 3. ஐந்து கருமிளகை நன்றாக மென்று உட்கொள்ளலாம்.
4. கிருஷ்ண துளசி (கரு துளசி) சாறு வடிவத்தில் அல்லது மாத்திரை வடிவில் வெறும் வயிற்றில் இரண்டு முறை தனியாகவோ அல்லது மேற்குறிப்பிட்ட அனைத்துடன் ஒன்றாகவோ எடுத்துக்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையில், பார்த்திபன் சொல்வது எந்த அளவுக்கு பலன் தரும் என தெரியவில்லை.. என்றாலும் பிரபலங்கள் பெரும்பாலும் கொரோனா குறித்த அக்கறை, விழிப்புணர்வில் களம் இறங்கி விட்டனர்!

English summary
coronavirus: Chinese diner dipping a baby mice in sauce and scoffing it alive video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X