சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடி தூள்.. வேகம் காட்டும் எடப்பாடியார்.. அதிரடியில் தமிழக அரசு.. புது டீமை களம் இறக்கி அசத்தல்!!

கொரோனாவுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டை பெற்று வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அடி தூள்.. செம மாஸ்.. சூப்பர்.. இப்படி நம் முதல்வரை சொல்லி கொண்டே போகலாம்.. தமிழகம் ஒரு ஆபத்தான பாதையில் பயணிக்க துவங்கி வரும் இந்த நேரத்தில் ஒவ்வொரு செயல்பாட்டையும் எடப்பாடி பழனிசாமி மிக சாதுர்யமாகவும், சிறப்பாகவும் கையாண்டு வருகிறார்.

Recommended Video

    கொரோனா தொற்று பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா ஆவேசம்

    தமிழக மக்கள் மனநிலை கடுமையான கலக்கத்திலும், குழப்பத்திலும் உள்ளது.. இந்த நோய் பற்றின முழுமையான விஷயமே இன்னும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.. உயிர் பீதியும் இல்லாமல் இல்லை.. அதனால்தான் தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.. அரசு என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டும் வருகின்றனர்!

    எடப்பாடியாரை பொறுத்தவரை தன்னுடைய ஆட்சி மீது எந்த குறையும், களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.. அதனால்தான் கொரோனா பாதிப்பு குறித்த ஒவ்வொரு நிகழ்வையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நொடிக்கொருதரம் அப்டேட் செய்தபடியே உள்ளார்... இது மக்களுக்கு ஓரளவு ஆதரவை தருகிறது.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    ஆனால் 2 வருஷத்துக்கு முன்பு பார்த்த முதல்வருக்கும், இப்போதைய முதல்வருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தென்படுகிறது.. யோசித்து பேசுகிறார்.. கோபப்படும் நேரத்தில் கோபப்படுகிறார்.. அரவணைக்கும் நேரத்தில் அரவணைக்கிறார்... தடாலடி, அதிரடிகளை அவ்வப்போது காட்டி மிரட்டுகிறார்.. அடிப்படையிலேயே இயல்பான, அமைதியான, எளிமையான குணநலன்களை எடப்பாடியார் பெற்றிருந்தாலும், பின்புலமாக சுனில் டீம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

     முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    யார் இந்த சுனில்... சில வருடங்கள் வரை திமுகவின் A to Z சூத்திரதாரி.. பிகே-வுடன் கைகோர்த்து வேலை பார்த்த அனுபவம் உடையவர்.. ஸ்டாலினுக்கு நெருக்கம்.. அரசியல் ஆலோசகர்.. "நமக்கு நாமே" பயணத்தில் ஸ்டாலினின் கலர் கலர் டிரஸ்.. நடைபயணம், சைக்கிள் பயணம், டீ குடித்தது, வாக்கிங் போனது, நாத்து நட்டது.. இப்படி நெருங்கும் அதேசமயம் ரசிக்கும்படியான வியூகங்களை வகுத்து கொடுத்தது சுனில் தலைமையிலான டீம்தான்.. திமுக தலைமை குடும்பத்தில் அதிகாரம் மிக்க நபராக வலம் வந்தவர்.

     அதிமுக டீம்

    அதிமுக டீம்

    சில மாதங்களுக்கு முன்புதான் ஓஎம்ஜி நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் ராஜினாமா செய்தபோதே, அதிமுக டீம் இவரை தன்பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாககூட செய்திகள் வந்தன. ஆனால் இது இப்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.. என்றாலும் மறைமுகமாக இவரது உதவி இருப்பதாக சொல்லப்படுகிறது.. கொரோனா விவகாரத்தில் முதல்வரின் புரோகிராம், பிரஸ்மீட் கட்சி கூட்டம், எல்லாத்தையும் பிளான் செய்வது சுனில் டீம்தான் என்கின்றனர். இது நன்றாக ஒர்க் அவுட் ஆகியும் வருகிறதாம்.

     அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    இந்த கொரோனா விவகாரத்தை முன்வைத்தே ஒருசில அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு மேலெழுந்த நிலையிலும், அவர்களை ஆஃப் செய்து தன்னுடைய பங்கை முன்னிலைப்படுத்தி வருகிறார் முதல்வர்.. மக்களை பதட்டமில்லாமல் வைத்துள்ளார்.. மக்களுக்கு மேலும் நம்பிக்கை தருவதற்காக அமைச்சர் ஆர்பி உதயகுமாரையும், வருவாய்த்துறை நிர்வாக ஆணையரான முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும் முதல்வர் எடப்பாடி களமிறக்கி விட்டிருக்கிறார்... தொற்று அபாயம் என்று சொல்லப்படும் முக்கிய மாவட்டங்களில், இவர்கள் வீடு வீடாக சென்று கொரோனா தொற்று சோதனைகளை நடத்தும் வேலைகளும் நடக்க ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    வணக்கம்

    வணக்கம்

    அதேபோல, "வணக்கம்.. உங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன்'" என்று ஆடியோ ஒன்றும் தமிழகத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது... போனில் இந்த ஆடியோ ஒலிபரப்பப்பட்டு வருகிறது.. "கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது... உங்கள் நலனை கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... இந்நோயை கட்டுப்படுத்த விழித்திருங்கள், விலகியிருங்கள், வீட்டிலேயே இருங்கள். நன்றி, வணக்கம்" என்கிறார் முதல்வர்.

     அம்மா உணவகம்

    அம்மா உணவகம்

    இது எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு திடீரென நுழைந்து ஆய்வு செய்தார் முதல்வர்.. அப்படியே அங்கு இட்லி வாங்கி சாப்பிட்டு உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார்.. சாப்பிட்டு முடித்ததும், "இட்லி நல்லா இருக்கு... யாரெல்லாம் வந்து கேட்கிறார்களோ அவங்க எல்லாருக்குமே சாப்பாடு கிடைக்குமாறு பார்த்துக்குங்க" என்று சொன்னார்.

    ஆறுதல்

    ஆறுதல்

    தமிழகம் கொரோனாவில் 3வது கட்டத்துக்கு போய்விட்டதா? அல்லது 2வது கட்டத்தில்தான் உள்ளதா என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.. ஆனால் முதல்வரின் இதுபோன்ற அதிரடி செயல்பாடுகள் தமிழக மக்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்து வருகிறது.. கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வந்தாலும் தமிழக அரசின் செயல்பாடுகளை நம்மால் மனசார குறை சொல்ல முடியாது!

    English summary
    coronavirus: cm edapadi palansamy is taking steps against coronavirus infection
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X