சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பலியான கீழக்கரை முதியவருக்கு கொரோனா உறுதி.. இறுதிசடங்கில் 300பேர் பங்கேற்றதால் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த கீழக்கரை முதியவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதை அடுத்து அவரது குடும்பத்தினரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி சோதனை செய்து வருகிறார்கள். இந்த சூழலில் முதியவரின் இறுதிச்சடங்கில் சுமார் 300 பேர் பங்கேற்றதால் அந்த பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த 69 வயது முதியவர் கடந்த மாதம் 15ஆம் தேதி துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். சென்னையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தார்.

    சென்னை வந்த அவருக்கு அடுத்த மூன்று நாட்களில் மிக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் அருகிலுள்ள மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் காய்ச்சல் 4 நாட்களை கடந்தும் குணமாகமால் இருந்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    காய்ச்சலால் பலி

    காய்ச்சலால் பலி

    அங்கு அவரிடம் பேசியபோது துபாயிலிருந்து வந்ததை அறிந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து முதியவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் . அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையில் முதியவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2ஆம் தேதி மாலை மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

    கொரோனா இருப்பது உறுதி

    கொரோனா இருப்பது உறுதி

    ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதி கடிதத்துடன் அவரது மகன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கொண்டுவந்தார். மூன்றாம் தேதி காலை கீழக்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் முதியவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு நேற்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்களுக்கு கிடைத்தது. அதில் முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    ராமநாதபுரம் சுகாதாரத்துறை

    ராமநாதபுரம் சுகாதாரத்துறை

    இதையடுத்து சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதில் முதியவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களை உடனடியாக தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. முதியவர் சென்னையில் காய்ச்சலால் அவதிப்பட்ட போது உடனிருந்து கவனித்த மகனின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்ப சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளார்கள்.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    அத்துடன் மகனின் குடும்பத்தினர் அவருடன் நெருங்கி பழகியவர்களின் விவரங்களை கேட்டு அவர்களையும் பரிசோதிக்க முடிவு செய்துள்ளார்கள். இதனிடையே கீழக்கரையில் முதியவரின் இறுதி நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தற்போது அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளதால் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பலருக்கும் பல தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    சரியாக ஆராயவில்லையா?

    சரியாக ஆராயவில்லையா?

    சென்னை அரசு மருத்துவமனையில் முதியவர் உயிரிழந்த போது சரியாக ஆராயாமல் கொரோனாநோய் தொற்று இல்லை என கூறி மருத்துவமனை நிர்வாகம் உடலை கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாதாரண மரணம் என நம்பி இறுதிச்சடங்கை செய்துள்ளார்கள். இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus confirmed for elderly victim in Chennai, 300 participated at funeral. The health department has decided.to test all
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X