சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டியர் மோடி.. விளக்கு ஏற்றுகிறோம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ப.சிதம்பரம் போட்ட அதிரடி ட்வீட்!

பிரதமர் அறிவிப்புக்கு ட்வீட் போட்டு கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: "டியர் மோடி.. நாங்கள் வரும் 5-ம் தேதி விளக்கு ஏற்றுகிறோம்... ஆனால் பதிலுக்கு நாங்க சொல்வதையும், பொருளாதார வல்லுனர்கள் சொல்கிற புத்திசாலித்தனமான ஆலோசனைகளையும் நீங்கள் கேட்கணும்.. நாட்டில் உள்ள பொருளாதாரக் குழப்பங்களுக்கும், வேதனைகளுக்கும் தீர்வு காணுங்கள்.. ஆறுதலும் நம்பிக்கையும் தரும் எந்த அறிவிப்பும் வரவில்லையே?" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டமாக கூறியுள்ளார்.

Recommended Video

    விளக்கு ஏற்றுவதன் பின்னணியில் அறிவியல் காரணம் இல்லை

    நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தொழிற்சாலைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் அவர்களின் நிலை கேள்விக்குறியானது.

    coronavirus: congress senior leader p chidambaram tweet on pm modis announcement

    ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில், இவர்களின் நிலைமையை கண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், வேலையிழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பொருளாதார நிதித்தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார்.

    இதற்கு பிறகு, ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிதித்தொகுப்பை ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு அறிவித்தது.. ஆனால் இதற்கும் ப.சிதம்பரம் கருத்து சொல்லும்போது, இது போதுமானதாக இல்லை, 2-வது கட்ட பொருளாதார நிதித்தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று மறுபடியும் ஒரு கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்தார்.

    இந்த சூழலில்தான் பிரதமர் மோடி மறுடிபயும் வீடியோவில் பேச போகிறார் என்ற தகவல் வெளியானது.. பிரதமரின் இந்த வீடியோ பதிவு பல தரப்பினருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுபோலதான் ப.சிதம்பரத்திற்கும் ஏற்படுத்தியது.. "நிச்சயம் மக்களுக்கு நிதித்தொகுப்பு ஏதாவது அறிவிப்பார் என நம்புவோம்.. ஒருவேளை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடாவிட்டால் தான் ஏமாந்து போய்விடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

    ஆனால் நேற்று பிரதமர் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.. அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக, வீடுகளில் விளக்கேற்றுவோம் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். இதையடுத்து தனது அதிருப்தியை ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி ஒரு கேள்வியையும் எழுப்பி உள்ளார். அதில், அவர் சொன்னதாவது:

    "டியர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே... நீங்கள் சொல்வதை கேட்போம்... 5-ந்தேதி தீபம் ஏற்றுவோம். ஆனால் பதிலுக்கு நாங்க சொல்வதையும், தொற்றுநோயியல் துறை வல்லுனர்கள், பொருளாதார வல்லுனர்கள் சொல்கிற புத்தி சாலித்தனமான ஆலோசனைகளுக்கும் நீங்கள் செவிகொடுங்கள்.

    நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தது, 2-வது நிதி உதவி திட்டம்தான்... இது கடந்த 25-ந்தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமனால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஏழைகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களுக்கான தாராளமான வாழ்வாதார தொகுப்பாக அமையும் என்று எதிர்பார்த்தோம்.

    உழைக்கிற ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தொழில் அதிபர்கள் முதல் தினக்கூலி தொழிலாளர்கள் வரையில் அனைவரும் பொருளாதார சரிவை தடுத்து நிறுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கான என்ஜின்களை திரும்பவும் இயக்குவதற்குமான நடவடிக்கைகளையும்தான் எதிர்பார்த்தார்கள்... ஆனால் 2 விஷயங்களிலும் ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது. ஆறுதலும் நம்பிக்கையும் தரும் எந்த அறிவிப்பும் வரவில்லையே?

    நீங்கள் சொல்லும் விளக்கேற்றும் குறியீடு முறை என்பது முக்கியம்தான். ஆனால், அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற கருத்துக்கு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தீவிரமான சிந்தனைகளும், நடவடிக்கைகளும் சமமான முக்கியம்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    English summary
    coronavirus: congress senior leader p chidambaram tweet on pm modis announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X