சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரேஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி?

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை ஒழிப்போம்.. அமைச்கர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்..

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1053 ஆக உயர்ந்துள்ளது. அதிகமாக கேரளாவில் 202 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    இன்று மட்டும் கொரோனா காரணமாக 6 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 8 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பை கண்டு பிடிப்பதற்காக காண்டாக்ட் டிரெஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஏ என்ற நபர் வெளிநாட்டில் இருந்து கொரோனா பாதிப்போடு இந்தியா வருகிறார். இந்தியாவில் அவர் பலரை சந்திக்கிறார். இவர்களுக்கும் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இவர்கள் எல்லோரையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    யார் எல்லாம்?

    யார் எல்லாம்?

    அதாவது ஏ என்ற நபர் ''காண்டாக்ட்'' செய்த எல்லோரையும் கண்டுபிடிப்பதுதான் காண்டாக்ட் டிரேஸ் முறை. இதன் மூலம்தான் கொரோனா மேலும் பரவுவதை தடுக்க முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை புதிதாக பாதிக்கப்பட்ட 8 பேரையும் சேர்த்து 50 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2,09,284 பேர் விமான நிலையங்களில் சோதிக்கப்பட்டனர்.

    அறிகுறி உள்ளவர்கள்

    அறிகுறி உள்ளவர்கள்

    கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு கொண்ட, கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் என்று கருதப்படும் மொத்தம் 13,323 பேர் மருத்துவமனையில் தனியாக வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 3018 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 1,763 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நெகட்டிவ் என்று 1632 பேருக்கு வந்துள்ளது. பாசிட்டிவ் என்று 42 பேருக்கு வந்துள்ளது, 89 பேருக்கு இன்னும் முடிவு வரவில்லை.

    தாய்லாந்து பயணிகள்

    தாய்லாந்து பயணிகள்

    இதில் தாய்லாந்தை சேர்ந்த பயணிகள் இரண்டு பேருக்கு ஈரோட்டில் கொரோனா ஏற்பட்டது. இதனால் இவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள் யார் யார் என்று சோதனை செய்யப்பட்டது. காண்டாக்ட் டிரேஸ் முறை ஓலம் யாருக்கு எல்லாம் கொரோனா அறிகுறி உள்ள என்று சோதனை செய்யப்பட்டது . இதன் மூலம் 520 பேர் வரை கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்கள் எல்லோரும் வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    யாரை எல்லாம் சந்தித்தார்கள்

    யாரை எல்லாம் சந்தித்தார்கள்

    தாய்லாந்து பயணிகள் தாங்கள் யாரை எல்லாம் பார்த்தோம், எப்போது பார்த்தோம் என்று கூறியதை வைத்து அவர்களின் தமிழக பயணம் குறித்த டைம்லைன் அமைச்சர் விஜயபாஸ்கர் டீம் மூலம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தாய்லாந்து பயணிகள் உடன் நேரடியாக நெருக்கமாக தொடர்பு ஈரோட்டை சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு கொரோனா அறிகுறி தீவிரமாக இருந்தது. இதனால் இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டார்கள்.

    அதிரடியாக கண்டுபிடித்தனர்

    அதிரடியாக கண்டுபிடித்தனர்

    காண்டாக் டிரெஸ் முறை மூலம்தான் இந்த 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் தாய்லாந்து பயணிகள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் அவர்கள் நடத்திய கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்று கணக்கு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஈரோடு, சேலம், கோயம்புத்தூரை சேர்ந்த 50 பேர் கலந்து கொண்டு உள்ளனர். காண்டாக்ட் டிரெஸ் முறை மூலம் இவர்கள் எல்லோரும் கண்டுபிடிக்கப்பட்டார்கள். இவர்களில் 12 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.

    எத்தனை பேருக்கு வைரஸ் உறுதி

    எத்தனை பேருக்கு வைரஸ் உறுதி

    இதில் தற்போது 4 கோவையை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நோயாளிகள் விவரம்:

    29 வயது ஆண் கோவையை சேர்ந்தவர். 55 வயது பெண், கோவையை சேர்ந்தவர். 10 மாதம் வயது ஆண் குழந்தை, கோவையை சேர்ந்தவர். 51 வயது பெண், கோவையை சேர்ந்தவர். 44 வயது ஆண், ஈரோட்டை சேர்ந்தவர். டெல்லி சென்று வந்துள்ளார். 48 வயது ஆண்,ஈரோட்டை சேர்ந்தவர். டெல்லி சென்று வந்துள்ளார்..67 வயது ஆண் ஈரோட்டை சேர்ந்தவர். டெல்லி சென்று வந்துள்ளார். 62 வயது ஆண் ஈரோட்டை சேர்ந்தவர். டெல்லி சென்று வந்துள்ளார்.

    English summary
    Coronavirus: Contact tracing helped in finding 8 new patients in Tamilnadu today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X