சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த பகீர்.. காற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: காற்றின் மூலமாகவும் கொரோனா பரவுமாம்.. கொரோனா வைரஸ் தரையில் பல நாட்கள் வரையிலும், காற்றில் பல மணி நேரமும் உயிருடன் இருக்கும் என்ற பகீர் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது..

Recommended Video

    Covid-19 Chennai's Public Opinion | வாழ ஆசையே இல்ல... கொரோனாவே வந்திட்டு போகட்டும்..

    நாளுக்கு நாள்... நொடிக்கு நொடி... பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் பற்றி இப்போது ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.. அமெரிக்காவை சேர்ந்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான மையம் சார்பாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    விஞ்ஞானிகள்

    விஞ்ஞானிகள்

    அதாவது, எந்தெந்த இடத்தில் எவ்வளவு மணி நேரம் இந்த கொரோனா வைரஸ் உயிர் வாழ முடியும் என்பதுதான் அந்த ஆய்வு. அப்பொருட்களின் மேற்படிப்புகளில் படிந்தால், எத்தனை நாட்கள், எவ்வளவு மணி நேரம் உயிரோடு இருக்கும் என்று லிஸ்ட் போட்டும் சொல்லி உள்ளனர். அதன்படி, ஒருவர் தும்மினாலும், இருமினாலும் அதன் மூலமாக வெளியேறும் கொரோனா வைரஸ் அப்படியே காற்றில் பரவும். காற்றில் குறைந்தது 3 மணி நேரம் உயிருடன் இருக்கும்.

    தடுக்க முடியாது

    தடுக்க முடியாது

    ஆனால் இதனை கிருமி நாசினி மருந்துகள் மூலம் மேலும் பரவாமல் தடுக்கலாம்.. அதேசமயம், முழுமையாக தடுக்க முடியாது. அதேபோல, பிளாஸ்டிக், ஸ்டீல் போன்றவைகளின் மேற்பரப்புகளில் இந்த வைரஸ் 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை உயிர் வாழும் என்கிறார்கள்.. இதில் பிளாஸ்டிக் மேற்பரப்பில் வைரஸ்களின் செயல்பாட்டை பாதியாக தடுக்க 6 மணி நேரம் 49 நிமிடங்கள் ஆனது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    செயல்பாடுகள்

    செயல்பாடுகள்

    அதேபோல, அட்டை பெட்டிகளில் 24 மணி நேரத்திற்கு மேல் இந்த வைரஸ் உயிர் வாழ முடியாதாம்... அட்டைப் பெட்டிகளின் மேற்பரப்பில் உள்ள வைரஸ்களின் செயல்பாட்டை பாதியாக தடுக்க மூன்றரை மணி நேரம் ஆகியுள்ளது.. துருப்பிடிக்காத ஸ்டீல் மேற்பரப்பில் வைரஸ்களின் செயல்பாட்டை பாதியாக தடுக்க 5 மணிநேரம் 35 நிமிடங்கள் ஆகியுள்ளன.

    சார்ஸ்

    சார்ஸ்

    செம்பு பொருட்கள் மீதான மேற்பரப்புகளில் 4 மணி நேரம் வரையும் இத்தகைய வைரஸ் உயிர் வாழ முடியும் என்றாலும் அவைகளின் மேற்பரப்பில் உள்ள வைரஸ்களின் செயல்பாட்டை பாதியாக தடுக்க 46 நிமிடங்கள் ஆனது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சார்ஸ் வைரஸுக்கும் கொரோனா வைரஸுக்கும் இடையே நிறைய காரணிகள் ஒத்துப்போவதாக இவர்கள் சொல்கிறார்கள்... அதனால்தான் இந்த கொரோனா வைரஸ் தொற்றுவோருக்கு SARS-COV-2 என்று பெயரும் வைத்துள்ளனர்.. சார்ஸ் நோயால் சுமார் 800 பேர் இறந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.. ஆனால் கொரோனாவால் இந்த எண்ணிக்கை ஏன் கூடுகிறது என்பது விளங்கவில்லை!

    அடுத்த பகீர்

    அடுத்த பகீர்

    காற்றில் 3 மணி நேரம் வைரஸ் உயிருடன் இருக்கும் என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் மிக மிக கவனிக்கத்தக்க விஷயம்.. அதேபோல, பிளாஸ்டிக், இரும்பு, அட்டைகள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீதும் 2, 3 நாட்கள் இந்த வைரஸ் உயிருடன் இருக்கும் என்பது அடுத்த பகீர் தகவல் ஆகும்... எப்படி பார்த்தாலும் மனித குலத்துக்கு இந்த வைரஸ் மிகபெரிய சவால்தான்!!

    English summary
    Coronavirus: Coronavirus stays infective in air for hours
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X