சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    அந்த 3 பேரை காணவில்லை... தொடரும் வுஹான் மர்மங்கள்

    நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. முதலில் மிகவும் மெதுவாக தமிழகத்தில் பரவி வந்த கொரோனா கடந்த 5 நாட்களில் அதீத வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 485 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா காரணமாக 3 பேர் பலியாகி உள்ளனர். இதில் 8 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று நாலாவது நபர் பலியானார். இன்று பலியான நபர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    எந்த ஊர்

    எந்த ஊர்

    ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் ஆவார் இவர். ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் துபாயில் இருந்து சென்னை வந்தார். சென்னை வந்தவருக்கு காய்ச்சல் இருந்ததால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இவருக்கு கொரோனா அறிகுறி இருந்த போதே, கடந்த சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 2ம் தேதியே பலியானார்.

    கொரோனா உறுதி செய்யப்பட்டது

    கொரோனா உறுதி செய்யப்பட்டது

    கொரோனா உறுதி செய்யப்படும் முன்பே அதீத மூச்சு திணறல் காரணமாக இவர் பலியானார். இதன் பின்தான் இவரின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. இவரின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் தற்போது வந்துள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இவர் கொரோனா காரணமாகத்தான் பலியானார் என்பது உறுதியாகி உள்ளது.

    இதற்கு முன் எத்தனை

    இதற்கு முன் எத்தனை

    இதையடுத்து நேற்று இரவு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னொரு முதியவர் கொரோனா காரணமாக பலியானார். 61 வயது முதியவர் நள்ளிரவில் பலியானார். இவர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

    இதனால் தமிழகத்தில் கொரோனா நோய் தோற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. முதல் நபர் மதுரையை சேர்ந்தவர். மதுரையில் கொரோனா காரணமாக பலியான இவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்று இன்னும் புதிராக உள்ளது. அதேபோல் விழுப்புரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று கொரோனா காரணமாக பலியானார். இவருக்கு 51 வயது.

    நேற்று தேனியில் பலி

    நேற்று தேனியில் பலி

    அதன்பின் தேனியை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் கொரோனா காரணமாக பலியானார். இவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படும் முன்பே தாக்குதல் தீவிரமானது. இதனால் அவர் பலியானார். நேற்று இவருக்கான கொரோனா மருத்துவ சோதனை முடிவுகள் வந்தது. இதில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Death toll reaches 5 in Tamilnadu After a Ramanathapuram man dies today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X