• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"செம ஃபாஸ்ட்".. அன்னைக்கு எம்பி வெங்கடேசன் கேட்ட கேள்வி.. இன்று மீள்கிறது மதுரை.. திமுக அரசு சபாஷ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலேயே மதுரையில்தான் அதிகமாக தொற்று உள்ளது என்று கூறப்பட்ட நிலையில், இப்போது மதுரை மாவட்டம் பல ஆச்சரியங்களை நிகழ்த்தி வருகிறது.. அங்கு எடுத்து வந்த பல்வேறு தடுப்பு முன்னெடுப்புகள் காரணமாக, தொற்று வெகுவாக குறைந்துள்ளது..
கடந்த முறையும் சரி, இந்த முறையும் சரி, தொற்று பாதிப்பு என்றாலே அது சென்னைதான் என்று பெயர் வந்துவிட்டது.. சென்னைக்கு தொற்று ஏற்பட்டால் அது பாதி தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்றே அர்த்தம்.

ஆனால், சென்னையை மீறி கோவை பீதியை கிளப்பிவிட்டது.. முதல்வர் முக ஸ்டாலின், 2 முறை நேரடியாக சென்று ஆய்வு செய்யும் அளவுக்கு கோவையில் கொரோனாவைரஸ் தாண்டவமாடியது.. இப்போது கோவையிலும் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

சரியும் கொரோனா.. 27 மாவட்டங்களில்.. மிக முக்கிய தளர்வுக்கு திட்டமிடும் தமிழ்நாடு அரசு? - பின்னணி!சரியும் கொரோனா.. 27 மாவட்டங்களில்.. மிக முக்கிய தளர்வுக்கு திட்டமிடும் தமிழ்நாடு அரசு? - பின்னணி!

பீதி

பீதி

எனினும், மதுரை மாவட்டத்தில்தான் அதிக தொற்று ஏற்பட்டதாக, அம்மாவட்ட மக்களே தெரிவித்தனர்.. ஒருமுறை எம்பி வெங்கடேசன், "சென்னையுடன் ஒப்பிடுகையில் மதுரையில் இரு மடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த அளவுக்கு பாதிப்பை உண்டுபண்ணியதுதான் மதுரை.

 படுக்கைகள்

படுக்கைகள்

2 மாதத்துக்கு முன்புகூட ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டது.. இன்னும் பத்தே நாட்களில் நிலைமை கைமீறி விடும்.. மதுரையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாவிடில் தனியார் மருத்துவமனைகள் 5 நாட்களுக்கும், அரசு மருத்துவமனைகள் 10 நாட்களுக்கும் மட்டுமே தாக்கு பிடிக்கும் என்று வெங்கடேசன் எம்பி தமிழக அரசை எச்சரித்திருந்ததையும் இங்கு நினைவுகூற வேண்டி உள்ளது.

 தொற்று பாதிப்பு

தொற்று பாதிப்பு

அப்படிப்பட்ட மதுரைதான் இன்று மீண்டு கொண்டிருக்கிறது.. ஏப்ரல் மாத காலத்தில் உச்சபட்ச அளவாக 4 ஆயிரம் என்ற அளவில் மதுரை மாவட்டத்தில் கொரோனா கேஸ்கள் பதிவாகின.. மாநகராட்சி சுகாதார துறை மேற்கொண்ட தீவிரமான முயற்சிகள் ஒரு பக்கம், தமிழ்நாட்டில் போடப்பட்ட லாக்டவுன் மறுபக்கம் என இரண்டுமே பெரும் பலனை தந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மதுரை மாநகராட்சி பகுதியில் கடந்த 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 649 மட்டுமே ஆகும்.

மாவட்டம்

மாவட்டம்

கடந்த 4 மாதங்களை ஒப்பிட்டு பார்த்தால், இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு... மக்கள் நன்றாக ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.. சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடிக்கிறார்கள்.. அனைவரும் தடுப்பூசி போடுவது, மாஸ்க் போடுவது போன்றவைகளை தொடர்ந்து கடைப்பிடித்தால், தொற்று இல்லாத மாவட்டமாக மதுரை வந்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

ஆய்வகம்

ஆய்வகம்

அதேசமயம், மருத்துவமனைகளில் பல்வேறு வசதிகளும் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, மதுரை மருத்துவக் கல்லூரி, நுண்ணுயிரியியல் கழகத்தில் கொரோனா ஆர்டிபிசிஆர் ஆய்வகம் கடந்த ஒன்றரை வருஷமாகவே, 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது... இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இங்கு செய்யப்பட்டுள்ளன...

வசதிகள்

வசதிகள்

மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் டெஸ்ட் செய்யப்பட்டால், அந்த ரிசல்ட்டுகளை உடனே எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதியும் பொதுமக்களுக்கு உள்ளது..டெஸட் முடிவுகளை மிக விரைவாக தெரிந்து கொள்ள வசதியாக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது... அதன்படி பரிசோதனை முடிவுகளை www.covid19mdumc.in என்னும் இணையதளத்திற்கு தங்களது 13 இலக்க சோதனை மாதிரி பதிவு எண்ணை பதிவு செய்ய வேண்டும்...

English summary
Coronavirus decreasing in Madurai District
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X