சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு- ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு அல்லது ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

 Coronavirus: Dr Ramadoss urges to impose nationa curfew for 3 weeks

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி அளித்த விருந்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சிங், அதன்பின் நாடாளுமன்ற கூட்டத்திலும், குடியரசுத் தலைவர் மாளிகை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதனால் குடியரசுத் தலைவர் முதல் எம்.பி,க்கள் வரை அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் தான் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் ஆகும். இவற்றைத் தடுப்பதற்காகத் தான் அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை செயல்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது!

தமிழகத்தில் கொரானோ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் தரமான முகக்கவசம் வழங்கப்பட வேண்டும். பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு உபரியாக உள்ள பகுதிகளில் இருந்து அனுப்பப்பட வேண்டும்!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக, பா.ம.க. தெரிவித்த யோசனைப்படி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழக அரசு ஒத்தி வைத்திருப்பது பாராட்டத்தக்கது. கூடுதலாக ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டு தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்!

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has urged to that Centre should impose National Curfew for 3 weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X