• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அண்ணே.. இந்தாங்க கபசுர குடிநீர்.. அக்கா.. நிலவேம்பு கசாயம் குடிங்க.. களமிறங்கிய நாம் தமிழர் கட்சி

|

சென்னை: "அண்ணே... இந்தாங்க கபசுர குடிநீர்.. அக்கா.. நிலவேம்பு கசாயம் குடிங்க".. என்று மிரட்டி வரும் கொரோனாவை ஓட ஓட விரட்ட நாம் தமிழர் கட்சி தம்பிகள் தீவிரமாக களமிறங்கிவிட்டனர்!

  கபசுர குடிநீர் குடிங்க...நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்-சித்த மருத்துவர்கள்

  மக்கள் அனைவருமே ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர்.. அதனால் வெளிநடமாட்டம் குறைந்துள்ளது.. சமூக விலகலையும் கடைபிடித்து வந்தாலும், இந்த கொரோனாவுக்கு மருந்து இல்லையே என்ற அச்சம் மட்டும் குறையாமல் உள்ளது!

   coronavirus: during corona lockdown naam tamizhar members help people in different ways

  ஆனால் எந்த வைரஸுக்கும் நம் சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சொல்லப்படுகிறது.. இதுபோன்ற வைரஸுக்கு கபசுர குடிநீர் நிவாரணமாக இருக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

  இந்த கபசுர குடிநீர் பொடி என்பது இருமல், காய்ச்சல் போன்றவற்றை தடுக்கும் வகையில், 15 வகையான மூலிகைகளை சேர்த்துதான் தயாரிக்கப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், கபசுர குடிநீர் சூரணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்.. இந்த கபசுர குடிநீர் பொடி அதிகளவில் விற்பனையாவதாக IMPCOPS டாக்டர்களும் தெரிவித்திருந்தனர். இதனை சித்த மருத்துவமனைகளிலும் மருந்துக்கடைகளிலும் மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

  தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவமான இந்த கபசுர குடிநீரைதான் நாம் தமிழர் கட்சியினரும் விநியோகம் செய்து வருகின்றனர்... வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

  அதேபோல, நிலவேம்பு கசாயமும் வழங்கி வருகின்றனர்... அத்துடன் கொரோனா விழிப்புணர்வு தூண்டறிக்கையையும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்தனர்.. கபசுரகுடிநீர், நிலவேம்பு கசாயத்தையும் தாண்டி பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை விநியோகிப்பதும் நாம் தமிழர் கட்சியினர் ஓடோடி சென்று உதவி வருகின்றனர்.

  வால்பாறை தொகுதி நாம்தமிழர்கட்சியின் சார்பாக சர்க்கார்பதி பகுதியில் வசிக்கும் பழங்குடிஇன மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.. இப்போதுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவால் தினசரி உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழைகள் சுமார் 60 பேருக்கு சாத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

  கோவை மாவட்டம் கண்ணப்பன் நகரில் வசிக்கும் 50 தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அப்பகுதிவாழ் நாம்தமிழர் கட்சியினர் வாங்கி தந்து உதவியுள்ளனர்.. திருப்பூரில் புது பஸ் ஸ்டேண்டில் உள்ள மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

  பாதுகாப்புப்பணியில் இருந்த அரசு பணியாளர்களுக்கு சானிடைசரும் தரப்பட்டது. சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஒரு தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.. இங்கு மேற்கு வங்காளத்தை சார்ந்த 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. இவர்கள் உதவி கேட்டதுமே ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் உறவுகள் நேரில் சென்று சாப்பாடு, அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்கி தந்துவிட்டு வந்துள்ளனர்.

  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ரூபாய் 50,000 மதிப்பிலான காய்கறிகளை வழங்கி பேருதவி செய்துள்ளனர். ,இது எல்லாவற்றிற்கும் மேலாக "இந்த இக்கட்டான சூழலில் குருதி தேவைப்படும் நோயாளிகளுக்கு குருதி கொடுக்கவும்,உதவிகள் தேவைப்பட்டால் செய்யவும் தயாராக இருக்கிறோம்" என்று காஞ்சி நாம் தமிழர் சுற்று சூழல் பாசறை சார்பாக அரசு ஆஸ்பத்திரியிலும், கலெக்டர் ஆபீசிலும் மனு தந்துள்ளனர். இப்படி தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் தமிழர் கட்சியினர் எல்லாவிதமான உதவிகளையும் செய்து வருகின்றனர்..

  மக்களுக்கும், மண்ணுக்கும், மரத்துக்கும், மலைக்கும் கூட போராடி கொண்டிருக்கும் சீமானின் விழுதுகள் இன்று பெருமளவு உருவாக தொடங்கிவிட்டனர்.. யாருமே சொல்லாமல், மக்கள் பிரச்சனைகளை இக்கட்சியினர் தாமாக முன்வந்து எடுத்து செய்வதால்தான், மக்களிடம் எந்நேரமும் நெருங்கியே இருக்கிறார்கள்!

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  coronavirus: during corona lockdown naam tamizhar members help people in different ways
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X