சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் "X"..!

பெண்களைவிட ஆண்களை அதிகமாக தாக்குகிறது கொரோனாவைரஸ்

Google Oneindia Tamil News

சென்னை: பெண்களைவிட ஆண்களையே கொரோனாவைரஸ் எளிதாக தாக்குகிறது என்றும், இதுவரை வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களில் பெண்களைவிட ஆண்களின் இறப்பு சதவிகிதமே அதிகம் என்றும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதற்கு என்ன காரணம்? அறிவியல் சொல்வது என்ன?

Recommended Video

    தடுப்பூசி போட்ட கொரோனா வராது | கொரோனா Hope | Quarantine | LockDown

    இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்! லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.. அனைவருமே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர்!!

    இந்த வைரஸ் வைரஸ் குறித்து நித்தம் ஒரு தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்லி வருகிறார்கள்.. அந்த வகையில் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களைவிட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வு முடிகளில் தெரியவந்துள்ளது.

    உயிரிழப்பு

    உயிரிழப்பு

    அதாவது பெண்களைவிட ஆண்களே 3 மடங்கு அதிகமாக உயிரிழக்கிறார்களாம்.. இந்த வைரஸ் அதிகமாக பாதித்து உலுக்கி எடுத்தது சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளைதான்.. அந்த நாடுகளில் உயிரிழந்தவர்களின் கணக்கை பார்த்தால் 71 சதவீதம் ஆண்களும் 29 சதவீதம் பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

    நடமாட்டம்

    நடமாட்டம்

    ஏற்கனவே சிகரெட் நிறைய பிடித்திருப்பவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றும் சேர்ந்து கொண்டு சீக்கிரத்திலேயே உயிரிழக்க செய்து விடுகிறது... அதுமட்டுமல்ல.. ஆண்களின் வெளிநடமாட்டங்கள் அதிகம்.. அப்படி இவர்கள் வெளியே செல்லும் பகுதிகளும் அசுத்தம், மாசு போன்றவை அதிகம் உள்ளன.. ஆனால் பெண்களுக்கு இந்த பழக்கங்கள் எல்லாமே குறைவு, மேலும் பெரும்பாலானோர் வீட்டிலேயே உள்ளனர்! இதனால் கைகளை சுத்தமாக கழுவி கொள்கிறார்கள்!

    சிகிச்சை

    சிகிச்சை

    ஆண்கள் வெளியே சுற்றுவது மட்டுமின்றி கைகளை அடிக்கடி கழுவுவது கிடையாதாம்.. அலட்சியம் அதிகம்.. பயம் கிடையாது.. அதனால் வைரஸ் எளிதாக ஒட்டிக் கொள்கிறது.. அப்படியே வைரஸ் தாக்கம் இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிகளுக்கும் போவது இல்லை.. ரொம்ப லேட்-ஆகத்தான் சிகிச்சையை எடுத் கொள்கிறார்கள்.. அதனால்தான் இவர்களது உயிரிழப்பு அதிகம் என்கிறார்கள்.

    அபாயங்கள்

    அபாயங்கள்

    பெண்களை பொறுத்தவரை ஹார்மோன்களில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது உயிரிழப்புகள் தடுக்கப்படுவதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.. அப்படியே வைரஸ் தாக்கினாலும், இயல்பிலேயே மன தைரியம் உள்ளவர்கள் பெண்கள்... அதனால் இதுபோன்ற அபாயங்களை ஆண்களை விட பெண்களே ஈஸியாக எதிர்கொண்டு அசால்ட்டாக கடக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

    குரோமோசோம்கள்

    குரோமோசோம்கள்

    உலகெங்கும் 100 வயதை தாண்டி வாழ்பவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள்தான்.. அதுவும் 110 வயதை எட்டுபவர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள் என்பது ஒரு போனஸ் தகவல்.. பெண்களின் குரோமோசோம்கள்தான் இதற்கெல்லாம் மூல காரணம்... பெண்களின் டிஎன்ஏவில் 2 X குரோமோசோம்கள் உள்ளன, ஆனால் ஆண்களுக்கோ 1 x குரோமோசோம்தான் உள்ளன.. இந்த x குரோமோசோம்தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் வேலையை செய்கிறது.

    பலசாலிகள்

    பலசாலிகள்

    ஒரு பக்கம் குரோமோசோம்கள் & மற்றொரு பக்கம் ஹார்மோன்கள் & இன்னொரு பக்கம் ஈஸ்ட்ரோஜென் இவை எல்லாமே சேர்ந்து பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவர்கள் உயிரை பத்திரமாக காத்து நிற்கிறது... பார்ப்பதற்கு பெண்களைவிட ஆண்களே பலசாலிகளாக காணப்பட்டாலும், இயற்கையிலேயே பெண்களே வலிமை மிக்கவர்களாக நின்று, அனைத்து வைரஸையும் ஓட ஓட விரட்டி வருகின்றனர் என்பதே நிஜம்!

    English summary
    why more men are dead by coronavirus than women and the Scientists give reasons for this
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X