சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடக்கிறது ஈரோட்டில்.. வூகானை போல மாறுமா.. கண்காணிப்பு தீவிரம்.. தனிமைப்படுத்தப்படும் மக்கள்!

தீவிர கண்காணிப்பு வளையத்தில் ஈரோடு மாவட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஒட்டுமொத்த மாநிலத்திலும் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது... காரணம் "ஈரோடு" மாவட்டம்.. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கை உள்ள மாவட்டமாக உருவெடுத்துள்ளது ஈரோடு.. இதன்காரணமாக முழு மாவட்டமும் கண்காணிப்பு வளையத்துக்குள் தீவிரமாக கொண்டுவரப்பட்டுள்ளன!

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    ஏற்கனவே 6 பாசிட்டிவ் கேஸ்கள் ஈரோட்டில் உள்ள நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களையும் கொரோனா பீடித்துள்ளது.. இதன்மூலம் ஈரோட்டில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் பீதியை கிளப்பிவிட்டு வரும் எதற்காக டெல்லி மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்?

    அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஏன்? டெல்லி அரசு இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்துவிட்டதா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.. ஆனால், இன்று தமிழ்நாட்டுக்குள் தீவிரமாக கொரோனா நுழைந்துள்ளது.. இதன் தீவிரம் தமிழகத்தின் ஈரோட்டிலேயே துவங்கியதுதான் அதிர்ச்சியாக உள்ளது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இந்த மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள், எப்படியும், பஸ், ரயிலை பிடித்துதான் சொந்த ஊர் போயிருப்பார்கள் என்பதால் இவர்களுடன் பயணித்தவர்களையும் கண்டறிய வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் யார் யார் என்ற விவரத்தை சுகாதாரத்துறை பணியாளர்கள் சேகரித்தனர்.. இப்போதைக்கு கிட்டத்தட்ட 1000 பேரை கண்டுபிடித்து, வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளனர்.

    தொற்று உறுதி

    தொற்று உறுதி

    இதே மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 6 பேர் தெலுங்கானாவில் இறந்துள்ளதால், ஈரோட்டில்
    தொற்று பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக கண்காணிக்க வேண்டிய அவசியம், நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.. மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிலை எப்படி உள்ளது, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன, சுகாதார பணிகள் என்ன என்பது குறித்த விவரங்களை நாம் சேகரித்தோம்.

    தடை உத்தரவு

    தடை உத்தரவு

    முதலாவதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரிய அக்ரஹாரம், மரப்பாலம் ஆகிய வீதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்த பகுதிகளில் வசித்த 20000 பேரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    தனிமை

    தனிமை

    வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது... அதன்படி மாவட்டம் முழுவதும் 16ஆயிரத்து 456 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 734 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 5 ஆயிரத்து 400 பேராக இருந்த தனிமைபடுத்துதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் மூடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.. அங்கிருப்பவர்களும் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

    எம்எல்ஏக்கள்

    எம்எல்ஏக்கள்

    மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.. ஆரம்ப கட்டத்தில் இந்த மருந்து தெளிப்பதற்கு மிஷின்கள் குறைவாக இருந்ததால் அதையும் மாவட்ட எம்எல்ஏக்கள் வாங்கி தந்துள்ளனர். 4 மண்டலத்துக்கு 5 பணியாளர்கள் வீதம் 20 துப்புரவு பணியாளர்களுக்கு நவீன கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி எம்எல்ஏக்கள் கேவி ராமலிங்கம், கேஎஸ் தென்னரசு ஆகியோர் தங்கள் செலவில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 20 நவீன கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரங்களை வாங்கி தந்துள்ளனர்.. இதனால் மருந்து தெளிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    சமூக விலகல்

    சமூக விலகல்

    ஆனால் சமூக விலகல் மாவட்டத்தில் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.. கடைப்பகுதிகளில் மக்கள் கூட்டம் தென்படுகிறது.. மாவட்டமே ஒரு வகை பீதி நிலவும்போது, சமூக விலகலை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வெளியில் ஒருசிலர் சுற்றி திரிந்துள்ளனர்.. அத்தியாவசியமில்லாத கடைகளை திறந்து வைத்து வியாபாரமும் சிலர் செய்திருக்கிறார்கள்.. அதனால் இதுவரை 533 வழக்குகள் பதிவு செய்து, 601 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பீதி, கலக்கம்

    பீதி, கலக்கம்

    எனினும் சிறப்பு கண்காணிப்பின்கீழ் ஒட்டுமொத்த மாவட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஒருவித பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.. மாநாட்டுக்கு சென்றவர்கள் மீதமுள்ளவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இதனால் கலக்கமும், பீதியும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதில் தமிழகத்தில் உள்ள ஈரோடும் ஒன்று.. இது அச்சத்தை கூட்டி வருகிறது.

    பரபரப்பு

    பரபரப்பு

    இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அமைப்பின் பெயரை குறிப்பிட்டு அதில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் தான் கொரோனாவை தமிழகத்தில் இறக்குமதி செய்கிறார்கள் என்ற தொனியில், பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தி ஒரு அரசே செய்தி வழங்கியிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஒருசிலர் குரல் எழுப்ப தொடங்கி உள்ளனர்.. கொரோனாவை முஸ்லிம்கள் தான் பரப்பி வருகின்றார்கள் என பல்வேறு பொய்யான அவதூறு பிரச்சாரங்கள் மூலம் தமிழக மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் புலம்பல்கள் எழுந்துள்ளன. அதனால் வைரஸ் கலக்கம், இனரீதியான ஆதங்கம், என ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஈரோட்டை அழுத்தி வருகிறது!

    English summary
    coronavirus: erode corona prevention precautions
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X