சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிக சோதனை மையங்கள்.. ஆனாலும் குறைவான கொரோனா டெஸ்ட்.. என்ன நடக்கிறது? பீலா ராஜேஷ் சொன்ன காரணம்!

தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா சோதனை மையங்கள் இருந்தும் கூட மிக குறைவான எண்ணிக்கையில் கொரோனா சோதனை செய்யப்படுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா சோதனை மையங்கள் இருந்தும் கூட மிக குறைவான எண்ணிக்கையில் கொரோனா சோதனை செய்யப்படுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விளக்கத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொடுத்துள்ளார்.

Recommended Video

    வந்துவிட்டது அதிவேக கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6095 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 790 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க காலத்தில் 300-500 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டது.

    தற்போது தமிழகத்தில் தினமும் 600-700 பேருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. சில நாட்கள் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே சோதனைகளை செய்கிறார்கள்.

    கடுமையான விமர்சனம்

    கடுமையான விமர்சனம்

    இதனால் தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இதுவரை 8486 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 17 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமாக 15500 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 6095 பேருக்கு மட்டுமே சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் அதிகம்

    தமிழகம் அதிகம்

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 17 மருத்துவமனைகளில் கொரோனா சோதனை செய்யப்படுகிறது. அதேபோல் நம்மிடம்தான் 15000க்கும் அதிகமான சோதனை உபகரணங்கள் உள்ளது. சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரேபிட் சோதனை கருவிகளும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் சராசரியாக 10 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா சோதனை மையங்கள்

    தமிழகத்தில் கொரோனா சோதனை மையங்கள்

    தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா சோதனை மையங்கள் இருந்தும் கூட மிக குறைவான எண்ணிக்கையில் கொரோனா சோதனை செய்யப்படுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விளக்கத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொடுத்துள்ளார். அதில் , மருத்துவர்கள் வேலை நேரம் இதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு இடத்திலும் மருத்துவர்கள் ஒவ்வொரு நேரங்களில் பணிகளை செய்கிறார்கள். சிலர் அதிகமான கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்கள்.

    விதிகளை பின்பற்றி செய்கிறோம்

    விதிகளை பின்பற்றி செய்கிறோம்

    நாங்கள் முறையான விதிகளை பின்பற்றித்தான் சோதனைகளை செய்து வருகிறோம். அதிக ரிஸ்க் இருக்கும் நபர்கள், பிரைமரி தொடர்பு கொண்ட நபர்கள் ஆகியோருக்கு முதலில் கொரோனா சோதனை செய்யப்படும். அவர்களை தொடர்பு கொண்ட செகண்டரி காண்டாக்ட் நபர்களுக்கு உடனே சோதனை செய்ய மாட்டோம். அவர்களை வீட்டில் இருக்கும்படி கூறி, அவர்களை கண்காணிப்போம்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    அறிகுறிகள் வந்தால் மட்டும்தான் சோதனை செய்வோம். சில சோதனை மையங்கள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. அதனால் சில இடங்களில் மெதுவாக சோதனை உள்ளது. சில இடங்களில் வேகமாக சோதனை நடக்க உள்ளது. நம்மிடம் 14 ஆயிரம் சோதனை உபகரணங்கள் உள்ளது. இதற்கு தகுந்தபடி சோதனை செய்து வருகிறோம். ஒரு முறை 100 சாம்பிள் மட்டுமே சோதனை செய்ய முடியும்.

    மூன்று முறை சோதனை

    மூன்று முறை சோதனை

    அதிகமாக மூன்று முறை ஷிப்ட் போட்டு சோதனை செய்தால் 300 பேருக்கு சோதனை செய்யலாம். அதே சமயம் நோயாளிகளின் சாம்பிள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல கால தாமதம் ஆகும். இந்த பயண காலம் காரணமாக தமிழகத்தில் சோதனைகள் நடக்க காலம் எடுக்கிறது. போக போக இது சரி செய்யப்படும். நாம் முடிந்த அளவு வேகமாகவே சோதனைகளை செய்து வருகிறோம், என்று பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus: Even with the many kits, Why Tamilnadu testing less, Beela Rajesh explains the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X