சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமா? இதை படியுங்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக, மருத்துவ ரீதியாக பாதிக்கப்படும் மக்களுக்கு கிவ்இந்தியா தொண்டு நிறுவனம் கை கொடுக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக, மருத்துவ ரீதியாக பாதிக்கப்படும் மக்களுக்கு கிவ்இந்தியா தொண்டு நிறுவனம் கை கொடுக்கிறது.

நாட்டின் மிக முக்கியமான ஆன்லைன் தொண்டுதளங்களில் ஒன்றான கிவ்இந்தியா (www.GiveIndia.org), தற்போது கொரோனாவிற்காக மக்களுக்கு கைகொடுக்க வந்துள்ளது. இந்தியாவில் COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஆதரிக்கும் பணியை தற்போது கிவ்இந்தியா நிறுவனம் கையில் எடுத்துள்ளது, கொரோனா காரணமாக மக்கள் பலர் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும் சூழ்நிலை உள்ளது. இதனால் இந்தியாவில் ஏராளமான மக்கள், குறிப்பாக தினசரி கூலி தொழிலாளர்கள் மத்தியில் பெரிய அளவில் பொருளாதர இழப்பு ஏற்படும். இந்தியாவில் பணிபுரிபவர்களில் 80% பேர் பதிவு செய்யப்படாத துறையில் உள்ளனர்.

Coronavirus: GiveIndia gives you a chance to help people who got affected

கொரோனா காரணமாக மேலும் வரும் மாதங்களில் இவர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும். இதுபோன்ற குடும்பங்களுக்கு உதவுவதற்காக நிறைய திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. முக்கியமாக வரவிருக்கும் மாதங்களில் வருமான ரீதியான உதவியை வழங்குவது உட்பட அரசாங்கம் பல வழிகளை திட்டமிட்டு வருகிறது. ஆனால் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பங்களின் நிலை இதனால் இன்னும் மோசம் அடையும். இதனால் நாடு முழுக்க உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவுவதற்கும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும் கிவ்இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் நம்பகமான இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் இதற்காக கிவ்இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பின்தங்கிய மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் குடும்பங்களுக்கு உதவுவதற்காக கிவ்இந்தியா இரண்டு முயற்சிகளை எடுக்க உள்ளது - பொருளாதார ரீதியான உதவியை வழங்குவதற்கும் வைரஸிலிருந்து பாதுகாப்பை வழங்குவதற்கும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு உணவு கிடைக்க ஒரு குழு ஏற்பாடு செய்யும்.இரண்டாவது குழு #IndiaAgainstCoronaVirus மூலம் சோப்புகள், சானிடிசர்கள் மற்றும் முகமூடிகள் கிடைக்காத இந்தியா முழுவதும் உள்ள வறுமையான குடும்பங்களுக்கு சுகாதார கருவிகளை வழங்கப்படும். இந்த முயற்சி மூலம் மருத்துவமனைகளிலும் உள்ளவர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும்.

உங்களின் ஒவ்வொரு நன்கொடையும் வைரஸின் பரவலைத் தடுப்பதிலும், COVID-19 மூலம் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும் உதவும். இந்த தொண்டு பிரச்சாரத்தை ஆரம்பித்த மூன்று நாட்களில், கிவ்இந்தியா 6000 க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து ரூ .1.5 கோடி வந்துள்ளது.

இதற்காக கிவ்இந்தியா க்ரை, ஹெல்பேஜ், கூன்ஜ், பூமி, ஆக்ஸ்ஃபாம், ஆக்சன் ஏட், டீம் எவரெஸ்ட், எஸ்.பி.பி.டி, வித்யா போஷக், செயின்ட் ஜூட், ஹபிடட் ஃபார் ஹ்யூமனிட்டி, மற்றும் சேவலயா போன்ற நம்பகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

அதேபோல் கிவ்இந்தியாவின் கார்ப்பரேட் பங்குதாரர்களான, ஓமிடியார் நெட்வொர்க் இந்தியா, மெக்கின்சி, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மீஷோ, ஜென்பாக்ட், பிளிப்கார்ட், மின்த்ரா மற்றும் ஜார்டின் லியோட் தாம்சன் உள்ளிட்ட பலர் கிவ்இந்தியாவுடன் இணைந்து இந்த பிரச்சாரங்களைத் தொடங்கி உள்ளனர்.

COVID-19 நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் பெரும்பாலான கார்ப்பரேட்டு ஊழியர்கள் அளித்த நன்கொடைகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த முயற்சி குறித்து கிவ்இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அதுல் சதீஜா கூறுகையில், "இந்த பிரச்சாரத்தை அவசரகால நடவடிகையாக நாங்கள் தொடங்கினோம் - சாதாரண தொழிலாளர் குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதியை இது வழங்க உதவும். இந்த நிதியின் மூலம், இந்த குடும்பங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை ரொக்கமாக வழங்க முடியும். அவர்களை நேரடியாக ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், என்றுள்ளார் .

இந்த கொரோனா காரணமாக முழு உலகமும் பாதிக்கப்படுகிறது, கொரோனா காரணமாக வேலை பாதுகாப்பு அல்லது சேமிப்பு இல்லாதவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். இதனால் இவர்களுக்கு நீங்கள் உதவி வேண்டும். தயவுசெய்து இது மக்களுக்கு செய்யப்படும் உதவிக்கான வேண்டுகோளாகக் கருதுங்கள், இதனால் COVID-19 ஆல் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான நிதி வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நிறுவனத்தில் நிதி உதவி அளிக்க, லிங்கை கிளிக் செய்யுங்கள் https://indiafightscorona.giveindia.org/

கிவ்இந்தியா தனது தன்னார்வ தொண்டு நெட்வொர்க் மூலம் வேலையற்ற நபர்களுக்கு வேலை அளிக்கிறது. திரட்டிய அனைத்து நிதிகளையும் 100% நேரடியாக குடும்பங்களுக்கு வழங்க உறுதி கொண்டு இருக்கிறது. இந்த தளத்தின் மூலம் அனைத்து நன்கொடைகளும் 80 ஜி & 501 (சி) (3) பிரிவுகளின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகின்றன.

கிவ்இந்தியா குறித்து:

மக்களுக்கு நிதி வழங்குவதன் மூலம் வறுமையை போக்க கிவ்இந்தியா உறுதி பூண்டு இருக்கிறது. 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கிவ்இந்தியா இந்தியாவின் மிகவும் நம்பகமான நிதி தொண்டு தளமாகும். இந்த தளம் மூலம் நேரடியாக மக்களுக்கு நிதி அளிக்க முடியும். 1M + நன்கொடையாளர்கள் மற்றும் 150+ கார்ப்பரேட் பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தை 1250+ இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஆதரித்துள்ளது, இது இந்தியா முழுவதும் 4 மில்லியன் + வாழ்க்கையை மாற்றியுள்ளது.

English summary
Coronavirus: GiveIndia gives you a chance to help people financially who got affected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X