சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி ஏப்.5-ல் இரவு 9 மணிக்கு விளக்கேற்ற சொல்வது எதனால் தெரியுமா? எச். ராஜா குபீர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி விளக்கு ஏற்ற அழைப்பு விடுத்திருப்பது எதற்காக என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    இரவு 9 மணிக்கு விளக்கேற்ற சொல்வது இதனால் தான் - எச். ராஜா விளக்கம்
    Coronavirus: H Raja tweets on PM Modis appeal on light candles

    இடதுசாரி எம்.பி. டி.கே. ரங்கராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில்,

    நோய்நொடிகள் வெம்புலி போல்
    நூறுவிதம் சீறு வதால்
    தாய்தந்தையர் பெண்டு பிள்ளை -என் தோழனே
    சாய்ந்து விழக் கண்டோமடா
    என்று பாடினார் ஜீவா ...
    இன்றும் மக்களின் நிலைமை இப்படியே இருக்க, கையைத் தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என விதவிதமாய் அறிவிப்புகள்.
    நமக்கு வாய்த்திருக்கும் பிரதமர்!

    என பிரதமர் மோடியின் விளக்கேற்றுங்கள் அறிவிப்பை விமர்சனம் செய்திருக்கிறார். இதற்கு எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளதாவது:

    ஆர் எஸ் எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவாரிடம் சங்கத்தை அரசு தடை செய்தால் என்ன செய்வீர்கள் என்ற போது அவர் சொன்னார்.ஒன்றும் செய்ய மாட்டோம். ஷாகா நேரத்தில் அது நடைபெறும் இடத்தில் ஒருமணி நேரம் படுத்திருப்போம் என்றார். உடல் மட்டுமே படுத்திருக்கும், உள்ளம் சங்கப் பணி பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும்.

    அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட உறுதியோடு ஒரு செயலைச் செய்யும் போது ஒற்றுமை, உற்சாகம் ஏற்படும். விளக்கேற்றுவதன் குறிக்கோள் அதுவே. ஆனால் இஸ்லாமைப் போன்ற மற்றொரு அடிப்படைவாத மதமான மார்க்சிய மதத்திற்கு இது புரியாது. என்ன செய்ய தங்களுக்கு வாய்த்த கொள்கை அப்படி. வணக்கம்

    English summary
    BJP National Secretary H Raja tweets on PM Modi's appeal on light candles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X