• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பாலியல் ஆர்எஸ்எஸ் சமூக விரோதிகளை எப்படி பெண்கள் தெருவில் அனுமதிப்பார்கள்.. திருமுருகன் காந்தி கேள்வி

|

சென்னை: பாலியல் வன்முறை செய்த ஆர்எஸ்எஸ் சமூக விரோதிகளை எப்படி ஊருக்குள், தெருவிற்குள், வீட்டிற்குள் எங்கள் பெண்கள் அனுமதிப்பார்கள்? என மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி காட்டமான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்!!

  ஆசியாவிலேயே இந்தியா தான் மோசம்... அதிர வைக்கும் புள்ளி விவரங்கள்

  லாக்டவுன் அமலில் உள்ளது.. எனினும் கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.. இதில் சென்னையில்தான் பாதிப்பு 200-ஐ தாண்டி சென்று கொண்டுள்ளது.

  இந்நிலையில், சென்னை மாநகராட்சி கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகளுக்காக தன்னார்வலர்கள், சமூக நல அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவும், அதன்பேரில் சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் சாலை பாதுகாப்பு பணிகள், வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஆர்எஸ்எஸ்

  ஆர்எஸ்எஸ்

  இதில் இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ்-ம் கொரோனா பாதுகாப்பு பணிகளில் சென்னை மாநகராட்சியோடு இணைந்து பணியாற்றுவதாக தெரிகிறது. இதற்குதான் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மதவாத அமைப்புகள் கையில் காவல் பணிகளை தரக்கூடாது என வலியுறுத்தி #ChennaiCorpRemoveRSS என்ற ஹேஷ்டேக்கும் உருவாகி உள்ளது.

  ஹேஷ்டேக்

  ஹேஷ்டேக்

  இந்த ஹேஷ்டேக் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பேரிடர் காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பல இடங்களில் உதவிகள் செய்த புகைப்படங்களை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டு ஆர்எஸ்எஸ் மீது தவறான கருத்தியலை முன்வைக்க வேண்டாம் என்றும் சிலர் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

  திருமுருகன் காந்தி

  இந்த ஹேஷ்டேக் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்து வரும் பணிகள் குறித்துதான் மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் கேள்வி எழுப்பி ட்வீட்களை பதிவிட்டு உள்ளார். அதில், "இந்துத்துவ RSS அமைப்பினரின் பாலியல் வன்முறை மிகபட்டியல் நீளமானது. பெண்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்திய RSS தலைவர்கள் ஏராளம். இப்படியானவர்களை எப்படி ஊருக்குள், தெருவிற்குள், வீட்டிற்குள் எங்கள் பெண்கள் அனுமதிப்பார்கள்? சமூக ஒழுங்கை ஏன் சீர்கெடுக்கிறீர்கள்?

  கமெண்ட்கள்

  தமிழர்கள் மிகத் தெளிவாகவே சனநாயக ரீதியில் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் #ChennaiCorpRemoveRSS இது இந்தியா முழுதும் எதிரொளித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதிகளை எங்கள் ஊருக்கு, தெருவிற்கு, வீட்டிற்கு அனுப்பாதீர் என்பதை இதைவிட உறுதியாக சொல்லமுடியாது" என்று இரண்டு ட்வீட்களை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கு எதிர்ப்பும், ஆதரவும் என கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

  கமல்ஹாசன்

  கமல்ஹாசன்

  இந்த விவகாரத்துக்கு நடுவில் கமல்ஹாசனை இழுத்து கொண்டு வந்து ஒரு ட்வீட் போட்டு அவரையும் திருமுருகன் காந்தி கேள்வி கேட்டுள்ளார். நேற்றைய தினம் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, கமல் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. "இந்தியத் திருநாடு, யாரையும் மதத்தாலோ, இனத்தாலோ, மொழியாலோ, தொழிலாலோ, பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவு தான் அரசியல் சட்டமாகி, தனி மனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது. அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே" என்று பதிவிட்டிருந்தார்.

  ஒழியட்டுமே

  ஒழியட்டுமே

  இந்த ட்வீட்டை டேக் செய்த திருமுருகன் காந்தி "இனம்' 'மதம்' 'மொழி' 'தொழில்' என பாகுபாடு பார்க்கக் கூடாது என்றிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இதில் 'ஜாதி' என்பது மட்டும் விடுபட்டுள்ளதே! இந்தியா/இந்துமதத்தின் மிகப்பெரும் பாகுபாடு ஜாதி தானே? அதுதானே தொழிலையும் நிர்ணயித்தது. 'ஜாதி' ஒழியத்தானே அண்ணல் போராடினார்? ஜாதிதான் ஒழியட்டுமே!" என்று தெரிவித்துள்ளார்.

  முஸ்லிம் மக்கள்

  இந்த ட்வீட்டுக்கு ஏராளமானோர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. "இதற்கு பெயர் தான் மய்யம்" என்றும் "ஜாதி வேண்டாம் என சொல்றவங்களை முதல்ல ஜாதிக்கான சலுகை கல்வி வேலைவாய்ப்பு இட ஒதிக்கீடு வேண்டாம் அப்படின்னு தைரியமா சொல்லுங்களேன்" என்றும் "சாதி வேண்டாம் என்று சொல்லும் நண்பர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை ST, SC வகுப்பினருக்கு திருமணம் செய்து வைத்து சாதியை ஒழிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.. முஸ்லீம் மக்கள் மதம் மாற்றம் செய்யாமல் இந்து கிருஸ்துவ நண்பர்களுக்கு தங்கள் பிள்ளைகள் திருமணம் செய்து வைத்தால் மதமும் அழிந்துவிடும்" என்றும் பதிவுகள் விழுந்தபடியே உள்ளன.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  coronavirus: how can women tolerate violence rss, may 17 thirumurugan gandhi questions
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more