சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடன் வாங்காதீங்க.. கிரெடிட் கார்டு பயன்படுத்தாதீங்க.. வாசகர் தரும் சூப்பர் ஐடியா!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா கரால பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கலாம் என நமது வாசகர்கள் ஆலோசனைகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளனர்.

நமது வாசகர் பிரபு சுந்தரம் கூறியுள்ள சில யோசனைகள்:

Coronavirus Impact On Economy: Dont use credit card more

நான் சில குறிப்புகளை இங்கு பட்டியல் இட்டுஉள்ளேன்.

1. கடன் வாங்கி வீடு வாங்கக்கூடாது (தனியார் வேலையில் உள்ளவன் இந்த வசனத்தை தினமும் படிக்கவும்)

2. கடன் அட்டையை , மிக குறைவாக பயன்படுத்தி கட்டி முடித்து விடு.

3 . என்ன வருமானம் இருக்கோ அதுக்கு தகுந்தாற்போல வீடு வாடகை தேர்ந்தெடு.

4 . வருமானத்தில் வருவதை பெரும்பகுதி சேமித்து கொள்.

இதேபோல நமது இன்னொரு வாசகர் சுந்தர பாண்டியன் கொடுத்துள்ள சில யோசனைகள்:

1. சாதாரண அரிசி 25 கிலோ மூட்டை ரூ. 1350 வரும். அதுவே நொய் அரிசி என்றால் 25 கிலோ ரூ. 850தான். அதை பயன்படுத்தலாம். 500 ரூபாய் மிச்சமாகும்.

2. அனைத்து பலசரக்குப் பொருட்களையும், மொத்தக் கடையில் சில காலத்திற்கு வாங்குங்க.

3. ஏசி போடுவதை தவிருங்கள். சீலிங் பேன் அல்லது டேபிள் பேனை பயன்படுத்துங்க. அதிக எண்ணிக்கையில் அவற்றையும் ஓட விடாதீங்க.

4. டூவிலரோ அல்லது காரோ அதி வேகத்தில் போவதைத் தவிர்த்தால் எரிபொருளை சிக்கனப்படுத்தலாம்.

பொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்கபொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க

5. அருகில் உள்ள கிராமம், விவசாயிகள் அல்லது சாதாரண வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்குங்க. விலை குறைவாக இருக்கும்.

6. பாலைத் தவிருங்க. கடுங்காபி குடிச்சுப் பழகுங்க.

7. வாராவாரம் கறி சாப்பிடுவதை தவிர்த்து விட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுங்க.

English summary
Avoid credit cards and dont borrow anything for now to escape from piling up of loans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X