சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செல்போன், கேப், அறிகுறியே இல்லை.. இப்படி எல்லாம் கூட கொரோனா பரவுமா.. தெரிந்து கொள்ளுங்கள்!

கொரோனா வைரஸ் எப்படி எல்லாம் பரவும், எதன் மூலம் பரவும் என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் எப்படி எல்லாம் பரவும், எதன் மூலம் பரவும் என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. மக்கள் இதை படித்து கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Recommended Video

    சென்னையில் 2வது நபருக்கு கொரோனா... பகீர் சந்தேகங்கள்

    கொரோனா வைரஸ் உலக நாடுகளை மட்டும் இன்றி தற்போது இந்தியாவையும் அச்சுறுத்த தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 175 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் அதிகமாக 47 பேருக்கு இந்த வைரஸ் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 27 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 15 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.

    கொரோனா டெஸ்ட் நடைமுறை இந்தியாவில் சரியில்லை.. இப்படி இருந்தால் நிலை மோசமாகும்.. நிபுணர்கள் வார்னிங்கொரோனா டெஸ்ட் நடைமுறை இந்தியாவில் சரியில்லை.. இப்படி இருந்தால் நிலை மோசமாகும்.. நிபுணர்கள் வார்னிங்

    மனிதரிடம் இருந்து மனிதருக்கு

    மனிதரிடம் இருந்து மனிதருக்கு

    இந்த வைரஸ் முதலில் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்குத்தான் அதிகம் பரவும். வைரஸ் உள்ள நபர்கள் ஒருவரையே ஒருவர் தொட்டுக்கொண்டால், உடல் ரீதியான தொடுதல் இருந்தால், வைரஸ் தாக்கிய நபர் உங்களுக்கு அருகே இருந்தால், தும்மினால், இருமினால் இந்த வைரஸ் பரவும். உடலில் இருந்து வெளியாகும் நீர் குமிழிகள் மூலம்தான் இந்த வைரஸ் எளிதாக பரவும்.

    என்ன பொருட்கள்

    என்ன பொருட்கள்

    கொரோனா வைரஸ் உள்ள நபர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தினால் கூட இந்த வைரஸ் பரவும். இந்த வைரஸ் சாதாரண வெப்பநிலையில் 14 நாட்கள் வரை உயிர் வாழும். அதனால் வைரஸ் தாக்கியவர்கள் பயன்படுத்திய போன், உடைகள், கணினிகள். தலையணை என்று எதை பயன்படுத்தினாலும் வைரஸ் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் கவனமாக இருக்க வேண்டும்.

    பொது இடம்

    பொது இடம்

    அதேபோல் வைரஸ் தாக்கியவர் பொது இடங்களில் தொட்ட பொருட்கள் மூலம் கூட வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதாவது மெட்ரோ கைப்பிடி, ரயில், பேருந்து இருக்கைகள், ஹோட்டல் இருக்கைகள் என்று பொது இடங்களில் உள்ள சாதனங்கள் மூலம் கூட வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதேபோல் நீங்கள் புக் செய்யும் கேப் வாகனங்கள், ஆட்டோக்கள் மூலம் கூட பரவலாம். இதனால்தான் உலகம் முழுக்க பொது இடங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    வேறு எப்படி பரவும்

    வேறு எப்படி பரவும்

    அதே சமயம் இந்த வைரஸ் அறிகுறி இல்லாத நபர்களிடம் இருந்தும் கூட பரவும். உதாரணமாக ஏ என்ற நபருக்கு வைரஸ் உள்ளது. ஆனால் அவருக்கு அறிகுறி தென்பட 14 நாட்கள் வரை ஆகும். அப்படிப்பட்ட சமயத்தில் அவருக்கு அறிகுறி ஏற்படும் முன்பே, வேறு ஒரு நபருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் அறிகுறி இல்லாத நபருடன் பழகினால் கூட சமயத்தில் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இதை கணிக்க முடியாது.

    உடல்

    உடல்

    அதே போல் வைரஸ் உள்ள நபர்களை தொட்டுவிட்டு உங்கள் முகம், நாக்கு, மூக்கு, காது ஆகிய பகுதிகளை நீங்கள் தொட்டால் அதன் மூலம் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்த வைரஸ் காற்றில் பரவாது. உங்கள் வீட்டு விலங்குகள் மூலமும் வைரஸ் பரவாது. ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவில் நாம் தற்போது வழக்கத்தில் வைத்து இருக்கும் எந்த உணவுகள் மூலமும் இந்த வைரஸ் பரவாது.

    English summary
    Coronavirus: In How many ways the epidemic can spread?- All you need to know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X