சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் டெஸ்ட் செய்த 8 பேரில் ஒருவருக்கு கொரோனா.. பிற மாவட்டங்கள் நிலைமை எப்படி? அதிரும் நிலவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 6,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

சென்னையை பொறுத்தளவில், மேலும் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 92,206 லிருந்து 93,537 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை பொறுத்தளவில், சுமார் 8 பேருக்கு ஒருவருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பதை பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 3ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. இன்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா தமிழகத்தில் 3ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. இன்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் இன்று மொத்தம் 61,729 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்களை ஒப்பிட்டால், இது அதிகமாகும். தமிழகம் முழுக்க மொத்தம், 22,00,433 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம், 115 பரிசோதனை மையங்கள் உள்ளன (58 அரசு+57 தனியார்). நெல்லையில் இன்று Liberty Diagnostic & Research Centre என்ற தனியார் ஆய்வகத்திற்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்

சென்னை நிலவரம்

பொதுவாக, எந்த ஊரில் எத்தனை பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்பது குறித்து தனித்தனியாக தெரிவிப்பதில்லை. எப்போதாவது தெரிவிக்கப்படுகிறது. மொத்த பரிசோதனை எண்ணிக்கைதான் தினமும் வெளியாகும். இன்று சென்னையில் சுமார் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 1,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதன்படி, பரிசோதனை செய்யப்பட்டவர்களில் சுமார் 8 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டங்கள்

மாவட்டங்கள்

சென்னை -1329, செங்கல்பட்டு -449, காஞ்சிபுரம் -442, விருதுநகர் -376, திருவள்ளூர் -385, தூத்துக்குடி - 317, மதுரை - 301, கோவை - 270, குமரி -269, தேனி - 235,
ராணிப்பேட்டை - 244, வேலூர் -212, நெல்லை-212, திருச்சி - 199, தஞ்சை-162, விழுப்புரம் -157 பாதிப்பு பதிவாகியுள்ளது.

Recommended Video

    Maridhas மீது வழக்குப்பதிவு | அந்த Email-ஐ அனுப்பியது யார்?
    குணமடைந்தோர்

    குணமடைந்தோர்

    திருவண்ணாமலை - 152, சேலம்-112, புதுக்கோட்டை-110, கள்ளக்குறிச்சி-104, திருவாரூர்-100, திண்டுக்கல்- 100, தென்காசி-99, கடலூர்-89,
    ராமநாதபுரம்-86, திருப்பத்தூர்-86, சிவகங்கை-84, நாமக்கல் -51, திருப்பூர்-51, நீலகிரி -40, கிருஷ்ணகிரி-31, தர்மபுரி - 30, கரூர்-27, பெரம்பலூர் - 25,
    ஈரோடு -22, நாகை-10, அரியலூர்-4 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்துள்ளது.

    English summary
    6,785 people have been affected by the corona virus epidemic in Tamil Nadu. Coronavirus infection is spreading fast in other districts Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X