சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 5 மாவட்டங்களில்... கொரோனா அதிகரிக்குமாம்... தமிழக தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 15 நாட்களில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தை அடையும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தலைமை செயலளார் சண்முகம், ''அடுத்த 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் இந்த மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

coronavirus infection may spread fast in 5 districts of Tamil Nadu Says Chief secretary Shanmugam

கடந்த வெள்ளிக்கிழமைதான் அனைத்து மாவட்டக் கலெக்டர்களுக்கு சண்முகம் எழுதி இருந்த கடிதத்தில், ''கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்றும் கூடுதல் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டு இருந்தார்.

கோயம்புத்தூரில் மட்டும் இதுவரை 20000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, புதிதாக 445 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை இந்த தொற்றில் இருந்து 16,164 கொரோனா நோயாளிகள் மீண்டுள்ளனர். 338 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில்...மனித பரிசோதனை நிறுத்தம்!! ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில்...மனித பரிசோதனை நிறுத்தம்!!

தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி எண்ணிக்கை 6,000 ஆக உள்ளது. இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,012 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவுக்கு 75,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
coronavirus infection may spread fast in 5 districts of Tamil Nadu Says Chief secretary Shanmugam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X