சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டு எழும் சென்னை.. ஸ்பெஷலிஸ்ட் ராதாகிருஷ்ணனின் மாயம்.. தப்பி வரும் தலைநகர்.. சாதித்தது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதில் சுகாதாரதுறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இவர் இதற்கு முன் பெற்ற பயிற்சிகளும், சரியான திட்டமிடலும் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக மாறியுள்ளது.

சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் தொடங்கியது. அதன்பின் ஏப்ரல் 27ம் தேதியில் இருந்து தினமும் 100க்கும் அதிகமான கேஸ்கள் வந்தது. அதன் பின்பான நாட்களில் சென்னையில் பேனிக் பையிங் கிளஸ்டர், கோயம்பேடு கிளஸ்டர் என்று வரிசையாக நிறைய கிளஸ்டர்கள் ஏற்பட்டது.

இதனால் காரணமாக சென்னையில் பெரிய அளவில் சமூகத்திற்கு இடையே கொரோனா பரவல் ஏற்பட்டது. தினமும் ஆயிரம், இரண்டாயிரம் என்ற எண்ணிக்கையில் கொரோனா பரவல் ஏற்பட தொடங்கியது.

பெரிய அச்சம்

பெரிய அச்சம்

அதிலும் கடந்த மாதம் முழுக்க சென்னையில் தினமும் 1700-2500 வரை கேஸ்கள் வந்தது. சில நாட்கள் சென்னையில் தினசரி கேஸ்கள் 3 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சென்னையில் மிக மோசமான சமூக பரவல் ஏற்பட போகிறது. சென்னை அடுத்த மும்பை, வுஹன், நியூயார்க் போல மாறிவிடும் என்று எல்லோரும் அச்சம் அடைந்தனர். சென்னையில் கட்டுக்கடங்காத வேகத்தில் கேஸ்கள் பரவியது.

பயன் அளிக்கவில்லை

பயன் அளிக்கவில்லை

இதனால் சென்னையில் நிறைய கட்டுப்பாட்டு பகுதிகள் உருவாக்கப்பட்டது. நிறைய திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதேபோல் தனி தனியாக நிறைய குழுக்கள் கூட வகுக்கப்பட்டது. ஆனாலும் கூட சென்னையில் கொரோனா கேஸ்கள் குறையவே இல்லை. தமிழக அரசு பல்வேறு அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு இருந்தாலும் கூட கேஸ்கள் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்தது.

யார் வந்தார்

யார் வந்தார்

அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ். இதை அடுத்து இவரை மாற்றிவிட்டு தமிழகத்தின் புதிய சுகாதாரத்துறை செயலாளராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவருக்கு பேரிடர் மேலாண்மையில் பெரிய அளவில் அனுபவம் இருக்கிறது. அதேபோல் இவர் முன்பு சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர். இதனால் இவருக்கு மீண்டும் அந்த பொறுப்பு கிடைத்தது.

பல்வேறு திட்டங்களை வகுத்தார்

பல்வேறு திட்டங்களை வகுத்தார்

இந்த நிலையில் ஜெ. ராதாகிருஷ்ணன் வந்ததும் வரிசையாக புதிய திட்டங்களை வகுத்தார். அதுவரை இருந்த பல்வேறு குழுக்களை கலைத்து விட்டு மொத்தமாக புதிய திட்டங்களை வகுத்தார். அதிலும் தொடக்கத்திலேயே மிகவும் சிம்பிளான அதே சமயம் அதிக பயன்தர கூடிய திட்டங்களை வகுத்தார். stick to basics என்று ஆங்கிலத்தில் சொல்வது போல அடிப்படையாக செய்ய வேண்டிய விஷயத்தை கண்டிப்புடன் செய்தார்.

சென்னை முழுக்க லாக்டவுன்

சென்னை முழுக்க லாக்டவுன்

அதில் முதல் விஷயம் சென்னையில் போடப்பட்ட லாக்டவுன். சென்னையில் மக்களையே வீட்டிற்குள் இருக்க செய்து தீவிரமான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து கொரோனாவை கட்டுப்படுத்த விதிகளை கொண்டு வந்தார். முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கூட்டு ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை லாக்டவுன் இருந்தது.

வீடு வீடாக நடந்த சோதனை

வீடு வீடாக நடந்த சோதனை


எப்போதும் லாக்டவுன் பலன் அளிக்காது என்று தெரியும். இதனால்தான் ஒரு பக்கம் லாக்டவுனை போட்டுவிட்டு இன்னொரு பக்கம் மிக தீவிரமாக ஜெ. ராதாகிருஷ்ணன் வீடு வீடாக சோதனைகளை துரிதப்படுத்தினார். அதன் ஒரு கட்டமாகத்தான் தற்போது சென்னையில் தாறுமாறான வேகத்தில் டெஸ்டிங் அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு + தீவிர டெஸ்டிங் என்ற இலக்குடன் தமிழக அரசு துரிதமாக செய்யப்பட்டு வருகிறது.

அதிலும் சென்னையில் வீடு வீடாக கூட சோதனைகள் செய்யப்படுகிறது. இன்னொரு பக்கம் சென்னை முழுக்க இன்னொரு பக்கம் மருத்துவ குழு வார்டு வாரியாக மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.

எல்லோரையும் தனிமைப்படுத்துதல்

எல்லோரையும் தனிமைப்படுத்துதல்

மூன்றாவதாக சென்னையில் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி குறித்து சோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா சோதனைகளை செய்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா இருந்தாலும் இல்லை என்றாலும் அரசு அவர்களை தனிமைப்படுத்தியது. வீடு வீடாக மக்களை தனிமைப்படுத்தி மொத்தமாக கொரோனா சங்கிலியை துண்டித்தனர். இப்போதும் இந்த கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கிறது.

தொடர் அறிவுரை

தொடர் அறிவுரை

இன்னொரு பக்கம் மக்களுக்கு மாஸ்க் அணிவதன் அவசியத்தை தொடர்ந்து ஜெ. ராதாகிருஷ்ணன் வழங்கி வந்தார். இந்த தொடர் கட்டுப்பாடு, மூன்று அடிப்படையான திட்டங்கள்தான் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது. தினமும் ஏறக்குறைய 3000 கேஸ்கள் வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தினமும் 1500+ கேஸ்கள் மட்டுமே வருகிறது. அதிலும் நேற்று 1200+ கேஸ்கள் மட்டுமே வந்தது.

கிராப் குறைந்துள்ளது

கிராப் குறைந்துள்ளது

வரும் நாட்களில் நிலைமை இன்னும் சரியாகும். பாதிப்பு பெரிய அளவில் குறையும் என்று கூறுகிறார்கள். சென்னையை அபாய கட்டத்தை தாண்டிவிட்டது என்றும் கூறுகிறார்கள். சென்னையில் தற்போது 73728 கேஸ்கள் உள்ள நிலையில் ஆக்டிவ் கேஸ்கள் 20275 பேர் மட்டுமே உள்ளனர். மொத்தமாக 52287 பேர் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பபட்டுள்ளனர்.

பின்னணி என்ன?

பின்னணி என்ன?

தமிழக அரசின் இந்த சாதனைக்கு பின் ஜெ. ராதாகிருஷ்ணன் பங்கு மிக முக்கியமானது ஆகும். சுகாதாரத்துறையில் இவருக்கு 6 வருட அனுபவம் உள்ளவர். 1992ம் ஆண்டு பேட்சை சேர்ந்த அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஏஎஸ் அதிகாரிகளின் குழுவிற்கு இடையே இவருக்கு பேரிடர் தடுப்பு ஹீரோ, ஸ்பெஷலிஸ்ட் என்றும் பெயர் இருக்கிறது. அந்த அளவிற்கு தமிழகத்தில் பல்வேறு பேரிடரின் போது இவர் மக்களுக்காக உதவி இருக்கிறார்.

செம வரலாறு

செம வரலாறு

2004ல் சுனாமி தாக்கிய போது இவர் செய்த பணி பாராட்டப்பட்டது. பேரிடர் மேலாண்மை துறையில் இவர் சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளார். தற்போது தமிழக அரசின் கீழ் இவர் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தடுப்பு முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் பணியாற்றி வருகிறார். பேரிடர் மேலாண்மையில் இவர் தமிழகத்தின் முகம் மட்டுமில்லை, இந்தியாவின் முகம் என்று கூறுகிறீர்கள். ஏனென்றால் ஐக்கிய நாடுகளின் பேரிடர் மேலாண்மை மேம்பாட்டு திட்டத்திற்கான (யுஎன்டிபி) இந்தியாவின் உதவி இயக்குனரே இவர்தான். அந்த அளவிற்கு இவரின் பெயர் உலக அளவில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: How J Radhakrishnan played a major role in containing spread?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X