சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா மக்கள் ஊரடங்கு: டாஸ்மாக் மதுபான கடைகளையும் நாளை மூடுவதாக அறிவித்தது தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக நாளை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனா பீதி.. கேரளா ஸ்டைலில் தமிழகத்தில் மது விற்பனை - வீடியோ

    நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.

    Coronavirus Janata Curfew: TN govt orders to one day shut down of TASMAC liquor shops

    இந்தியாவில் இனிதான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை ஒருநாள் மட்டும் பொதுமக்கள் ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அனைவரும் தங்களது வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாலை 5 மணிக்கு அனைவரும் இந்த இக்கட்டான தருணத்தில் பணியாற்றுவோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கைகளை தட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    அமெரிக்க துணை அதிபருக்கு நெருக்கமானவருக்கு கொரோனா.. போர்க்கால சட்டத்தை கையில் எடுத்த டிரம்ப்.. பரபர!அமெரிக்க துணை அதிபருக்கு நெருக்கமானவருக்கு கொரோனா.. போர்க்கால சட்டத்தை கையில் எடுத்த டிரம்ப்.. பரபர!

    இதனை ஏற்று நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பொது போக்குவரத்து, ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்திலும் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளும் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    English summary
    Ahead of Janata Curfew, TamilNadu govt today ordered to one day shut down of the TASMAC liquor shops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X