சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சார்.. நீங்கதான் கவனிக்கணும்".. கோரிக்கை வைத்த சீமான்.. உடனடியாக பதிலளித்த கேரள முதல்வர் அலுவலகம்

சீமானுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "தமிழ் குடும்பங்களுக்கு அங்கே வாடகை கேட்கிறாங்களாம்.. வாடகை தராதால் 48 தமிழ் குடும்பங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக நீங்கள்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சீமான் கேரள முதல்வருக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார்.. "கண்டிப்பா.. இதை பற்றி உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். நன்றி" என்று அடுத்த சில மணி நேரங்களில், கேரள முதல்வர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

Recommended Video

    இந்தியாவுக்கு வழிகாட்டி... கொரோனாவை கேரளா எதிர்கொண்டது இப்படி தான்

    ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.. தற்போது மே 3-ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டும் உள்ளது. இதனால் தொழிலாளர்களும் தினக்கூலிகளும் கையில் காசு இல்லாமல் உள்ளனர்.. யாருக்கும் வேலையும் இல்லை.. இந்நிலையில், கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ் குடும்பங்களை சிக்கி கொண்டுள்ளனர். அவர்கள் வீட்டின் ஹவுஸ் ஓனர்கள், வாடகை தராததால் வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

    கொள்வாயலல் கிராமத்தில் இந்த தமிழ் குடும்பங்கள் மரம் வெட்டும் தொழிலை செய்துள்ளனர்.. இதற்காக ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பிலும் வசித்து வந்துள்ளனர்.. இந்த சமயத்தில் வாடகை தர முடியாததால் அவர்கள் வீட்டை விட்டு துரத்தி விடப்பட்டுள்ளனர்.

    கண்டனம்

    கண்டனம்

    இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.. இதுபோன்ற இக்கட்டமான நேரத்தில்கூட, இரக்கமில்லாத இச்செயலை பலரும் கண்டித்தனர்.. இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டு கேரள முதல்வருக்கு ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    அதில், "வாடகைக்கு பணம் செலுத்தாததால் 48 தமிழ் குடும்பங்கள் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர். ,இதை கேட்டதும் எனக்கு வருத்தமாக இருக்கிறது.. ஊரடங்கால் அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் தவித்துவரும் இந்த தொழிலாளர்கள் வாடகைகளை செலுத்தமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்... நீங்கள் தயவு செய்து இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    கேரள முதல்வர்

    கேரள முதல்வர்

    ஆனால் சீமானின் இந்த கோரிக்கைக்கு கேரள முதல்வர் அலுவலகம் உடனடியாக பதிலளித்துள்ளது.. "தங்களது புகார் குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பேன்.. எங்களது கவனத்துக்கு இந்த பிரச்சனையை கொண்டு வந்ததற்கு நன்றி" என்று பதில் வந்துள்ளது. இந்த ட்வீட்டை பார்த்து பரவசமடைந்த சீமான், பதிலுக்கு நன்றி தெரிவித்து இன்னொரு ட்வீட் போட்டுள்ளார்..

    அண்ணே இங்கிலீஷ்

    அண்ணே இங்கிலீஷ்

    "இந்த பிரச்சனையை கவனித்ததற்கு நன்றி... இவ்வளவு சீக்கிரமாக பதிலளித்தது பாராட்டத்தக்கது.. இந்த விவகாரத்தில் உங்கள் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்டவர்களையும் உரிய முறையில் கவனித்து கொள்வார்கள் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்களை பார்த்த நாம் தமிழர் கட்சியினர், "எந்த படை வந்து நின்றால் என்ன சீமான் படை கலங்காது, எந்த தடை எங்களுக்கு போட்டால் என்ன இனி சீமான் படை வெல்லும்" என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. ஒருசிலர் "சீமான் அண்ணே இங்கிலீஷ் எல்லாம் பேசுறாரு" என்று வியப்புடன் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

    சபாஷ்

    சபாஷ்

    எப்படியோ, நம் முதல்வரும் சரி, பக்கத்து மாநில முதல்வரும் சரி.. நேரடியாகவே மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து களைபவர்கள்.. ட்விட்டர்வாசிகளுக்கு நம் முதல்வர்தான் உடனுக்குடன் பதில் சொல்லி ரெஸ்பான்ஸ் செய்து வருகிறார் என்றால், கேரள முதல்வரும் அப்படியேதான் இருக்கிறார்.. இப்படிப்பட்ட செயல்கள்தான் இந்த நெருக்கடி சமயத்தில் மக்களுக்கு மேலும் நம்பிக்கையை தந்து வருகிறது!

    English summary
    coronavirus: kerala cm pinarayi vijayan replies to seemans request
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X