சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேறு "சில" காரணமும் இருக்கிறது.. தமிழகத்தில் கை மீறி போகும் நிலை.. கொரோனா பரவலின் பகீர் பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கோயம்பேடு காரணமாக மட்டும் கொரோனா பரவவில்லை, இதற்கு பின் வேறு காரணமும் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வரும் கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 22333 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று மொத்தமாக 804 கேஸ்கள் வந்துள்ளது. சென்னையில் இதுவரை வந்ததில் இதுதான் அதிகமான எண்ணிக்கை ஆகும். சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14802 ஆக உயர்ந்துள்ளது .

இதுதான் தற்போது பிரச்சனை.. தமிழகத்திற்கு கவலை அளிக்கும் 3 விஷயங்கள்.. அதிர்ச்சி தரும் பின்னணி!இதுதான் தற்போது பிரச்சனை.. தமிழகத்திற்கு கவலை அளிக்கும் 3 விஷயங்கள்.. அதிர்ச்சி தரும் பின்னணி!

தமிழகம் கோயம்பேடு

தமிழகம் கோயம்பேடு

இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்பேடு காரணமாக மட்டும் கொரோனா பரவவில்லை, இதற்கு பின் வேறு காரணமும் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி கோயம்பேடு காரணமாக கொரோனா கேஸ்கள் ஏற்பட தொடங்கியது. அப்போது ஏற்பட்ட கேஸ்கள் வேகமாக பரவியது. இரண்டு வாரத்தில் சரசரவென்று தமிழகத்தில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது.

மாநிலம் முழுக்க கேஸ்கள்

மாநிலம் முழுக்க கேஸ்கள்

கோயம்பேடு காரணமாக மாநிலம் முழுக்க கேஸ்கள் வேகமாக பரவியது. ஆனால் தற்போது கோயம்பேடு காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் கேஸ்கள் வருவதில்லை. அதாவது கோயம்பேடு சென்ற நபர்கள், கோயம்பேடு வியாபரிகள், லாரி ஓட்டுனர்கள் என்று யாருக்கும் பெரிய அளவில் கேஸ்கள் வருவதில்லை. ஆனாலும் தினமும் தமிழகத்தில் 800+ கேஸ்கள் வருகிறது.

வேறு கிளஸ்டர்

வேறு கிளஸ்டர்

இன்று அதை எல்லாம் மீறும் வகையில் ஒரே நாளில் 1000+ கேஸ்கள் வந்துள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு பரவல் இல்லாத போதிலும் இப்படி கேஸ்கள் அதிகமாக வருகிறது. இதனால் தமிழகத்தில் கோயம்பேடு காரணமாக மட்டும் கொரோனா பரவவில்லை, இதற்கு பின் வேறு காரணமும் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது மக்கள் இடையே வேறு விதமான கிளஸ்டர் பரவல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

சென்னையில்

சென்னையில்

முக்கியமாக தினமும் தமிழகத்தில் ஏற்படும் கேஸ்களில் 70-80% கேஸ்கள் சென்னையில் இருந்துதான் வருகிறது. இதனால் சென்னையில் எங்காவது ஏதாவது கிளஸ்டர் பரவல் ஏற்பட்டு இருக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் இப்படி வரும் கேஸ்களில் பலருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பே இல்லை. அதாவது இப்போதெல்லாம் எந்த விதமான காண்டாக்ட்டும் இல்லாமல் கொரோனா கேஸ்கள் சென்னையில் வருகிறது.

உறுதியானது

உறுதியானது

ராயபுரம், திருவிக நகர் போன்ற பகுதிகளில் அதிகமாக கேஸ்கள் பரவி வருகிறது. இதற்கு பின் என்ன காரணம் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் ஸ்டேஜ் 3 பரவல் ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இனிமேல் காண்டாக்ட் டிரேஸ் செய்வது சென்னையில் பெரிய அளவில் பலன் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஸ்டேஜ் 3 தற்போது தீவிரம் அடைந்து இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

விசாரணை

விசாரணை

தமிழகத்தில் இப்படி கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை முன்னே சமூக பரவல் ஏற்பட்டு, அது தற்போது வெளியே தெரிய தொடங்கி உள்ளதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது போன மாதமே பலருக்கு கொரோனா பரவி இப்போது அது எதிரொலிக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதிக அளவில் டெஸ்டிங் செய்ய செய்யதான் இதன் உண்மை பின்னணி தெரிய வரும் என்கிறார்கள்.

English summary
Coronavirus: Koyambedu is not only the reason for surge of cases Tamilnadu in recent days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X