சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 அடுக்கு கிருமி நாசினி.. 20 நாள் திட்டம்.. மீண்டும் இயங்க தயாராகிறது கோயம்பேடு மார்க்கெட்.. பின்னணி

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்காக பணிகளை சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சிஎம்டிஏ) மேற்கொண்டு உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்காக பணிகளை சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சிஎம்டிஏ) மேற்கொண்டு உள்ளது. விரைவில் இதனால் மார்க்கெட் தொடங்கப்படும் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    மீண்டும் இயங்க தயாராகிறது கோயம்பேடு மார்க்கெட்

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 489 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 4,895 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தில்... ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்திருமணத்துக்கு சேர்த்து வைத்த பணத்தில்... ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்

    எத்தனை கேஸ்கள்

    எத்தனை கேஸ்கள்

    தமிழகத்தில் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகரிக்க கோயம்பேடு முக்கிய காரணம் ஆகும். கடந்த 27ம் தேதிதான் கோயம்பேட்டில் தமிழகத்தில் முதல் நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அங்கிருக்கும் பழக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. அவர் மூலம் பலருக்கு பரவியது. இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்பேட்டில் இருந்து மட்டும் மொத்தம் 2200 பேருக்கு இதுவரை தமிழகம் முழுக்க கொரோனா கேஸ்கள் பரவி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    உறுதி கிடையாது

    உறுதி கிடையாது

    கோயம்பேட்டில் கொரோனா குறித்து காண்டாக்ட் டிரேஸ் செய்வது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. தமிழகம் முழுக்க பலருக்கு கோயம்பேடு காரணமாக கொரோனா பரவி உள்ளது. கேரளாவிலும் கூட இதனால் செகண்ட் வேவ் ஏற்பட்டுள்ளது. ஆனால் கோயம்பேடு காரணமாக சென்னைதான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1000க்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மொத்தமாக மூடினார்கள்

    மொத்தமாக மூடினார்கள்

    இதனால் கோயம்பேடு மார்க்கெட் மொத்தமாக மூடப்பட்டது. அங்கு இருந்து மார்கெட் அப்படியே திருமழிசைக்கு மாற்றப்பட்டது. மலர் மற்றும் பழக்கடை மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. அங்குதான் தற்போது மார்க்கெட் வியாபாரம் நடந்து வருகிறது. ஆனால் இந்த மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும். முழு பாதுகாப்போடு மீண்டும் மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்து வருகிறது. வியாபாரிகள் சங்கம் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது.

    திறக்க முடிவு

    திறக்க முடிவு

    இந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்காக பணிகளை சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சிஎம்டிஏ) மேற்கொண்டு உள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு கடையிலும் மூன்று அடுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த கிருமிநாசினிகள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக தற்போது பேராசிட்ரிக் ஹைட்ரஜன் பெராக்ஸைட் தெளிக்கப்பட்டு வருகிறது.

    தீவிர பணிகள்

    தீவிர பணிகள்

    இது மிகவும் சக்தி வாய்ந்த கிருமிநாசினி ஆகும். இதை தற்போது மார்க்கெட் முழுக்க அனைத்து கடைகளிலும் ஒரு கடை விடாமல் தெளித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து சிட்ரமைட் குளோரோஆக்சைட் தெளிக்கப்பட்டு வருகிறது. இது மருத்துவமனைகளில் கிருமிகளை நீக்க பயன்படுத்தப்படும். இது மிகவும் வலிமை வாய்ந்தது. அதேபோல் வெவ்வேறு கிருமி நாசினிகள் கொண்ட இன்னொரு கலவையும் தெளிக்கப்பட்டு வருகிறது.

    மூன்று அடுக்கு பணிகள்

    மூன்று அடுக்கு பணிகள்

    இப்படி மூன்று கிருமிநாசினிகள் கொண்ட கலவை அங்கே தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக 100க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சுகாதார பணிகள் இன்னும் 20 நாட்களில் முடியும் என்று கூறுகிறார்கள். அதன்பின் கடைசியாக மீண்டும் ஒருமுறை கோயம்பேடு மார்கெட் ஆய்வு செய்யப்படும். அதன்பின் விரைவில் மார்க்கெட் தொடங்கப்படும் என்று அங்கு உள்ள கோயம்பேடு வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: Koyembedu market to open soon after disinfection in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X