சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

17 நாட்களுக்குப் பின் சென்னையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு - இறைச்சி கடைகள் ஹோட்டல்கள் திறப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகின்றன. இதனையடுத்து இறைச்சி கடைகள், ஹோட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்டவை இன்று முதல் திறக்கப்படுகின்றன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. இதனால் இந்த மாவட்டங்களில் மட்டும் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

Coronavirus: Lockdown eases in Chennai and Four Dists from today

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இறைச்சி கடைகளுக்கு அனுமதி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் இவையெல்லாம் இயங்கும்! இறைச்சி கடைகளுக்கு அனுமதி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் இவையெல்லாம் இயங்கும்!

லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து இன்று முதல் இயங்கக் கூடியவை:

  • இறைச்சி கடைகள், காய்கறிகடைகள், மளிகை கடைகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படும்.
  • ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
  • டாக்சிகள், ஆட்டோக்கள் இயக்கப்படும். டாக்சிகளில் பயணிகள் 3 பேர், ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் பயணம் செய்யலாம்.
  • வர்த்தக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.
  • தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்
  • டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும்.
  • சலூன்கள், அழகு நிலையங்கள் ஏசி இல்லாமல் இயங்கலாம்.

English summary
After 17 days of intense lockdown in Chennai and suburban areas, eased the restrictions in the region from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X