சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டங்கள்- மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் இல்லை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டங்களை கொண்டாடினர். கொரோனா லாக்டவுனால் மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெறவில்லை.

ஏப்ரல் 24-ந் தேதி முதல் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வந்தனர். 30 நாட்கள் நோன்பு முடிந்த நிலையில் கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது.

Coronavirus lockdown: Muslims celebrate Eid al Fitr

தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. வழக்கமான ரம்ஜான் நாளில் மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெறும்.

ஆனால் கொரோனா லாக்டவுனால் இம்முறை இஸ்லாமியர்கள் மசூதிகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். முகக் கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடித்து ரம்ஜான் கொண்டாடப்பட வேண்டும் என்று ஏற்கனவே வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது

இதனடிப்படையில் இன்று ரம்ஜான் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தும் இருந்தனர்.

English summary
Eid was celebrated in the country on today amid Coronavirus lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X