சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சில நகரங்களில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மக்கள் தனிநபர் இடைவெளியுடன் மிக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

Recommended Video

    புதுச்சேரியில் 100 ரூபாய் காய்கறி பேக் அறிமுகம்.. ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள் - வீடியோ

    கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று 12-வது நாளாக லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது.

    Coronavirus lockdown: People throng Mutton Shops

    லாக்டவுன் காலத்தில் வார இறுதிகளில் இறைச்சி கடைகளில்தான் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த வாரம் லாக்டவுன் காலத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் இறைச்சி கடைகளில் பெரும் கூட்டமாக கூடினர்.

    Coronavirus lockdown: People throng Mutton Shops

    இதனையடுத்து இந்த வாரம் பல நகரங்களில் இறைச்சி கடைகள் ஏப்ரல் 12-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் பல நகரங்களில் இன்று இறைச்சி கடைகள் திறந்திருந்தன.

    சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் இறைச்சி கடைகள் முன்பாக இன்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இங்கு தனிநபர் பாதுகாப்பு இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசைகளில் இன்று இறைச்சி வாங்கினர்.

    Coronavirus lockdown: People throng Mutton Shops

    சில நகரங்களில் மைதானங்களில் மீன்சந்தை அமைக்கப்பட்டிருந்தன. அங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலை 1 கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ800 முதல் ரூ1,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    English summary
    The Mutton Shops in some cities of Tamilnadu witnessed a large number of people buying meat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X