சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்தமானில் இருந்து தொழிலாளர்கள், யாத்ரீகர்களை சென்னைக்கு அழைத்து வர சிறப்பு கப்பல்

Google Oneindia Tamil News

சென்னை: லாக்டவுனால் பிற மாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளர்கள், மாணவர்களை மீட்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து சொந்த இடங்களுக்கு பொதுமக்களை அனுப்பி வைக்க சிறப்பு கப்பல் சேவையும் இயக்கப்படுகிறது.

40 நாட்கள் லாக்டவுன் மே 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது நாளை தெரியவரும்.

Coronavirus Lockdown: Special ships between Port Blair, Chennai for migrant workers

இதனிடையே பிற மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் அழைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து மாநில அரசுகள் சிறப்பு பேருந்துகள் மூலம் தங்களது மாநில தொழிலாளர்கள், மாணவர்களை பிற மாநிலங்களில் இருந்து அழைத்து வருகிறது.

அதேபோல் மாநிலங்களிடையே தொழிலாளர்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்தமானில் இருந்து சென்னைக்கு சிறப்பு கப்பல் சேவை இயக்கப்பட உள்ளது.

அசத்தல்.. வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் பணி தொடங்கியது.. கை தட்டலுடன் கிளம்பிய ரயில் அசத்தல்.. வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் பணி தொடங்கியது.. கை தட்டலுடன் கிளம்பிய ரயில்

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் தவிக்கும் பிற மாநில தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஏதுவாக, போர்ட்பிளேயரில் இருந்து சென்னைக்கு சிறப்பு கப்பல் ஒன்று இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
The Andaman and Nicobar Islands administration has decided to arrange special ships between Port Blair and Chennai to ferry stranded migrant workers, students, pilgrims and tourists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X