சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் சரியான வழி.. அச்சப்பட வேண்டாம்.. விஜயபாஸ்கரிடம் தெரிவித்த மருத்துவர் குழு.. நம்பிக்கை!

தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிராக சுகாதாரத்துறை மிக சரியான பாதையில் செல்கிறது, இதை குறித்து அச்சப்பட வேண்டாம் என்று சிறப்பு மருத்துவர் குழு அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிராக சுகாதாரத்துறை மிக சரியான பாதையில் செல்கிறது, இதை குறித்து அச்சப்பட வேண்டாம் என்று சிறப்பு மருத்துவர் குழு அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    New Rules On Quarantine And Testing In Tamilnadu

    தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் நாளுக்கு நாள் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 447 பேருக்கு புதிதாக கொரோனா ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 7365 பேர் உள்ளனர். தமிழகத்தில் 2309 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார் .

    திடீரென ஒரே நாளில் குறைந்த கேஸ்கள்.. முடிவிற்கு வருகிறதா கோயம்பேடு கிளஸ்டர்.. நேற்று என்ன நடந்தது? திடீரென ஒரே நாளில் குறைந்த கேஸ்கள்.. முடிவிற்கு வருகிறதா கோயம்பேடு கிளஸ்டர்.. நேற்று என்ன நடந்தது?

    விஜயபாஸ்கர் பேட்டி

    விஜயபாஸ்கர் பேட்டி

    விஜயபாஸ்கர் தனது பேட்டியில், தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே இறப்பு சதவிகிதம் மிக குறைவாக இருக்கிறது. வெறும் 0.67 சதவிகிதம்தான் தமிழகத்தில் இறப்பு விகிதம் உள்ளது. பல்வேறு மாநிலங்களை விட நாம் முன்னேறி இருக்கிறோம். மிக சரியான சிகிச்சை முறைதான் இதற்கு காரணம். அதேபோல் நாங்கள் விரைவாக கொரோனா நோயாளிகளை கண்டுபிடித்து விடுகிறோம். அதனால் எளிதாக சிகிச்சை கொடுக்க முடிகிறது.

    வேகமாக டெஸ்ட்

    வேகமாக டெஸ்ட்

    நாங்கள் வேகமாக டெஸ்ட் செய்வதும் இதற்கு காரணம். நாங்கள் மூன்று லட்சம் பேர் வரை டெஸ்ட் செய்து இருக்கிறோம். வேறு யாரும் இந்த அளவிற்கு டெஸ்ட் செய்யவில்லை. தமிழகத்தில் கேஸ்கள் அதிகரிக்க இது ஒரு காரணம். நாங்கள் இப்படி வேகமாக டெஸ்ட் செய்வது மிக சிறப்பான செயல் என்று ஐநாவின் மருத்துவர்கள் எங்களை பாராட்டி இருக்கிறார்கள். நாங்கள் செய்யும் செயல் சிறப்பானது என்று கூறுகிறார்கள்.

    மருத்துவர் குழு என்ன சொன்னது

    மருத்துவர் குழு என்ன சொன்னது

    தமிழக மருத்துவ வல்லுநர்கள் குழு எங்களிடம் இதை குறித்து தெரிவித்தனர். தமிழகத்தில் வேகமாக டெஸ்ட் செய்யப்படுகிறது. கொரோனா நோயாளிகள் தொடக்கத்திலேயே அடையாளம் காணப்படுகிறார்கள். இதனால் இறப்பு எண்ணிக்கை குறைகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் இன்னொரு பக்கம் அதிகரிக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை பார்த்து நாம் அச்சப்பட கூடாது என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

    டெஸ்டிங்தான் காரணமா

    டெஸ்டிங்தான் காரணமா

    அதிக டெஸ்ட் எடுக்கும் போது எண்ணிக்கை உயரத்தான் செய்யும். கவனமாக செயல்பட்டால், இவர்களை குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. எங்களுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் மக்களால் தமிழகத்தில் கிரீன் சோன்களில் மீண்டும் கேஸ்கள் வருகிறது. அவர்களை எளிதாக டெஸ்ட் மூலம் கண்டுபிடிக்கிறோம். இதை சிறப்பாக செய்து வருகிறோம்.

    வரும் நாட்களில் குறையும்

    வரும் நாட்களில் குறையும்

    இதனால் வரும் நாட்களில் கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் குறையும். தமிழக அரசு தனது பணியை மிக சிறப்பாக செய்து வருகிறது. தமிழக மருத்துவ குழு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மோசமான நோயாளிகளுக்கு கூட கொரோனா வந்து இருக்கிறது. அவர்களை கூட நாங்கள் குணப்படுத்தி இருக்கிறோம், எல்லோரையும் குணப்படுத்துவோம், என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கரின் இந்த பேட்டியும், மருத்துவர் குழுவின் ஆலோசனையும் நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளது.

    English summary
    Coronavirus: Medical team told me that we are going in the right way says Minister Vijayabaskar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X