சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிரட்டினால் மருந்து தரக்கூடாது.. கேட்டால் தரலாம்.. டிரம்ப் ஒரு பக்கா பிசினஸ்மேன்.. அன்புமணி கருத்து

மிரட்டி கேட்டால் மருந்து தரக்கூடாது என்று அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "அதிபர் டிரம்ப் ஒரு அரசியல்வாதி இல்லை.. அரசியல் அனுபவமும் இல்லாதவர்.. அவர் ஒரு பக்கா பிசினஸ்மேன். ஒன்னுமே தெரியாது.. அவருக்கு தெரிந்தது எல்லாம் லாப-நஷ்டம் கணக்குதான்.. மருந்தை சாதாரணமாக கேட்டிருந்தாலே நாம மனிதாபிமான அடிப்படையில் தந்திருப்போம்.. இப்படி மிரட்டி கேட்டால் தரக்கூடாது, இது என் கருத்து" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஒரே மருந்து தான்... இந்தியாவிடம் கோரிக்கை வைக்கும் உலக நாடுகள்

    உலகை மிரட்டி உருட்டி வரும் கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு
    வருகின்றன. மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர்.

    இந்த சமயத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் டாக்டர்கள் பரிந்துரைத்து
    வருகின்றனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதனால் இந்த மருந்துக்கு ஏராளமான நாடுகளில் செம கிராக்கி ஏற்பட்டுள்ளது... உச்சகட்டமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை தங்களுக்கு ஏற்றுமதி செய்யாவிடில் பதிலடி தரப்படும் என மறைமுகமாக எச்சரிக்கையை இந்தியாவுக்கு விடுத்திருந்தார்.. மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவும் இதற்கு இசைந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சிக்கும், சர்ச்சைக்கும் உள்ளாக்கி வருகிறது.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    அதிபர் இப்படி இந்தியாவை மிரட்டி மருந்து கேட்டது குறித்து பல தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.. டிரம்பின் மிரட்டலுக்கு பாஜக தரப்பு பணிந்திருக்க கூடாது என்பதும் அது குறித்து யாருமே வாய் திறக்காமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் பேசுபொருளாகவே உருவெடுத்து வருகிறது. இதை பற்றி அன்புமணி ராமதாஸிடமும் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்ப... அதற்கு அவர் சொன்னதாவது:

    என் கருத்து

    என் கருத்து

    "மிரட்டினால் தரக்கூடாது.. கேட்டால் தரலாம்.. இது என்னுடைய கருத்து.. அதேபோல அண்டை நாடுகளான பங்களாதேஷ் , இலங்கைக்கும்கூட உதவலாம்.. அதேநேரத்தில் இன்னைக்கு உலக அளவில் நம்மிடம்தான் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது.. இது நமக்கு போதுமானதாகவும் உள்ளது.. ஆனால் இப்போதைக்கு இதை பயன்படுத்தலாமா, வேண்டாமா என்று இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படவில்லை.. நம்மகிட்டயும் ஆராய்ச்சியில்தான் உள்ளது.

    டிரம்ப்

    டிரம்ப்

    இங்கு மட்டுமல்ல.. அமெரிக்காவிலேயும் ஆய்வில்தான் உள்ளது.. இந்த மருந்துக்கு இன்னும் அப்ரூவல் தரவில்லை.. ஆனால் முன்கூட்டியே இந்த மருந்து வேண்டும் என்று கேட்டு டிரம்ப் உலக நாடுகளை மிரட்டிட்டு வர்றார்.. இது தப்பு... அவர் ஒரு அரசியல்வாதி இல்லை.. அரசியல் அனுபவமும் இல்லாதவர்.. அவர் ஒரு பக்கா பிசினஸ்மேன். ஒன்னுமே தெரியாது.. அவருக்கு தெரிந்தது எல்லாம் லாப-நஷ்டம் கணக்குதான்.

    தரக்கூடாது

    தரக்கூடாது

    மக்கள், மனிதர்கள், மனிதாபிமானம் பற்றி இப்படி எதுவுமே தெரியாது. அதனால்தான் இப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,. அரசியலிலேயே இருந்து அதன்பிறகு அதிபராக வந்திருந்தால், ஒருவேளை இந்த விஷயத்தை அவர் வேறுவிதமாக கையாண்டிருக்கலாம்... ஆனால் கேட்டிருந்தாலே மனிதாபிமான அடிப்படையில் நாம் மருந்து தந்திருப்போம்.. மிரட்டினால் நாம் தரக்கூடாது" என்று தன்னுடைய தனிப்பட்ட கருத்தை முன்வைத்தார்.

    English summary
    coronavirus: mp anbumani ramadoss slams donald trump
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X